ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

59,524 கி.மீ தொலைவிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 09 AUG 2023 4:37PM by PIB Chennai

01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.

 

ரயில்களை விரைவுபடுத்துவது என்பது இந்திய ரயில்வேயில் (ஐ.ஆர்) ஒரு தொடர்ச்சியான முயற்சி மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும். ஐ.ஐ.டி-பாம்பேயின் உதவியுடன் அறிவியல் பூர்வமாக இந்திய ரயில்வே மேற்கொண்ட நேர அட்டவணையை சீரமைப்பதன் நோக்கங்களில் ஒன்று, பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் சேவைகளாகவும், எக்ஸ்பிரஸ் சேவைகளை சூப்பர்பாஸ்ட் சேவைகளாகவும் மாற்றுவதன் மூலம் ரயில் சேவைகளை விரைவுபடுத்துவதாகும். வழக்கமான பெட்டிகளுடன் இயங்கும் ரயில்களை எம்.இ.எம்.யு.க்களுடன் மாற்றுவதும் பயணிகளுக்கு விரைவான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்திய ரயில்வே அதிக வேக திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ஆகஸ்ட் 3, 2023 வரை, 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 1947083

AD/ANU/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1947250) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu , Manipuri