சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்
प्रविष्टि तिथि:
09 AUG 2023 3:32PM by PIB Chennai
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் தொடர்பாக, மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன் கீழ் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 28, ஜூன் 2023 கருத்துகள் / பரிந்துரைகளுக்காக அறிவிப்பு வெளியிட்டது.
வாகனத் தொழில் தரநிலை (ஏஐஎஸ்) -197-ன் படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகன எடை 3.5 டன்களுக்கும் குறைவாக உள்ள மோட்டார் வாகனங்களுக்கு இது பொருந்தும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களின் சோதனை, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் விதி 126-ல் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை முகமைகளில் மேற்கொள்ளப்படும்.
சோதனை முகமை ஏஐஎஸ்-197-ன் படி வாகனங்களை மதிப்பீடு செய்து, படிவம் 70-பி-ன் படி மதிப்பீட்டு அறிக்கையை நியமிக்கப்பட்ட நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பீட்டு அறிக்கையை பரிசோதித்து ஒப்புதல் அளித்தவுடன், வாகனத்தின் நட்சத்திர மதிப்பீடு நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றப்படும்.
இருப்பினும், விதி 126 அல்லது மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 இன் உற்பத்தி தேவைகளுக்கு இணங்க ஒப்புதல் தேவைகளிலிருந்து மத்திய அரசால் விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த விதியில் எதுவும் பொருந்தாது.
வரைவு அறிவிப்பின்படி, இது 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
ANU/AD/SMB/KPG
(रिलीज़ आईडी: 1947227)
आगंतुक पटल : 293