வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஐ.ஐ.எஃப்.டி.யில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், அதன் 6 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
Posted On:
09 AUG 2023 2:32PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (ஐ.ஐ.எஃப்.டி) வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம் (சி.டி.ஐ.எல்) அதன் 6-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அத்துடன் சி.டி.ஐ.எல் இதழின் ஆறாவது ஆண்டு இதழை ஆகஸ்ட் 4, 2023 அன்று புதுதில்லியில் வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால், வணிகவியல் துறை கூடுதல் செயலர் திரு பீயுஷ் குமார், ஐ.ஐ.எப்.டி., துணைவேந்தர், பேராசிரியர் திரு சதீந்தர் பாட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு சி.டி.ஐ.எல் நிறுவப்பட்டு ஆறு ஆண்டுகளைக் குறிக்கிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்டம் தொடர்பான சட்ட சிக்கல்களில் திறனை மேம்படுத்துவதற்காக வர்த்தகத் துறையால் சி.டி.ஐ.எல் நிறுவப்பட்டது. சி.டி.ஐ.எல் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டம் குறித்த தகவல்களின் களஞ்சியமாக செயல்படுகிறது மற்றும் உலகளாவிய பொருளாதார சட்ட பிரச்சினைகள் குறித்த வளர்ந்து வரும் உரையாடலில் ஈடுபடுவதிலும் செல்வாக்கு செலுத்துவதிலும் ஒரு சிந்தனைத் தலைவராக உருவெடுத்துள்ளது.
ஆர்.வெங்கட்ரமணி தனது சிறப்புரையில், வளரும் நாடுகளின் உணர்திறன் மற்றும் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் உலகளாவிய முதலீட்டுச் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். முதலீட்டுப் பாதுகாப்பு வசதிகளைத் தீர்மானிப்பதில் ஒரு புதிய மற்றும் மாற்று முன்னுதாரணம் குறித்த புது தில்லி பிரகடனத்தை வெளியிட வேண்டிய நேரம் இது என்று அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சதீந்தர் பாட்டியா, இந்தியாவின் உள் மற்றும் வெளிப்புற முதலீடுகளை அதிகரிக்க பிராந்திய முகாம்களை முதலீட்டாளர்களுக்கு உகந்ததாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சி.டி.ஐ.எல்., தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் நெடும்பாரா, மையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
***
AD/ANU/IR/RS/KPG
(Release ID: 1947207)
Visitor Counter : 137