மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை அதிகரிக்கவும் ஆராய்ச்சிப் பூங்காவை அரசு திறக்கிறது

Posted On: 07 AUG 2023 4:24PM by PIB Chennai

ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி தில்லி, ஐஐடி குவஹாத்தி, ஐஐடி ஐதராபாத், ஐஐடி காந்திநகர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய இடங்களில் ஆராய்ச்சிப்  பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஐஐடி சென்னை, ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி தில்லி ஆகியவற்றில் உள்ள ஆராய்ச்சிப்  பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன, மற்றவை முடிவடையும் நிலையில் உள்ளன.

 

 இந்த ஆராய்ச்சிப் பூங்காக்களின் முக்கிய நோக்கங்கள், உயர் மதிப்பிலான தொழில்களுடன் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஏற்படுத்துதல், மாணவர்களிடம் தொழில் முனைவோர் மற்றும் புதிய முயற்சி  மற்றும் வலுவான கல்வி இணைப்புகளை உருவாக்குதல், கல்வி உள்ளடக்கத்தைத் தொழில்துறைக்கு விரிவுபடுத்துவதை அதிகரித்தல், நெருக்கமான ஒத்துழைப்புகள் மூலம் கல்வித் திட்டத்திற்கு மதிப்பு சேர்க்க உதவுதல் போன்றவையாகும். ஆராய்ச்சிப் பூங்காக்களின் பல்வேறு நோக்கங்களை அடைவதற்காக, இவை பொதுவாக நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் நிறுவப்படுகின்றன.

 

இத்தகவலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

 

ANU/SM/SMB/KRS(Release ID: 1946538) Visitor Counter : 86