மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

'அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் காலமுறை மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்கான காலமாற்ற சீர்திருத்தங்கள்' அறிக்கை குறித்த கருத்து / ஆலோசனைகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 2023 ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Posted On: 07 AUG 2023 6:28PM by PIB Chennai

உயர் கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்காக, ..டி கான்பூர் ஆளுநர்கள் குழுவின் தலைவரும், ..டி கவுன்சில் நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை 03 நவம்பர் 2022 தேதியிட்ட உத்தரவின் மூலம் மத்திய அரசு அமைத்தது.

 

தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் பார்வைக்கு இணக்கமான தொலைநோக்கு உத்தி  சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது மற்றும்  தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நவீன அமைப்புகள் மூலம் சரிபார்க்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான, மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்துடன் உயர் கல்வி நிறுவனங்களின் ஒப்புதல், அங்கீகாரம் மற்றும் தரவரிசைக்கு எளிய, நம்பிக்கை அடிப்படையிலான, புறநிலை மற்றும் பகுத்தறிவு முறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இக்குழு பரிசீலித்தது.

 

தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பின், 'இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் காலமுறை மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்கான காலமாற்ற சீர்திருத்தங்கள்' குறித்த தனது வரைவு அறிக்கையை மத்திய  அரசின் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையிடம் குழு சமர்ப்பித்தது.

 

முன்னதாக, இந்த அறிக்கை 2023மே19 முதல் 2023 ஜூலை 15வரை அனைத்துப்  பங்கேற்பாளர்களிடமிருந்தும் கருத்துக்களை / ஆலோசனைகளைப் பெறுவதற்காகப்  பொதுவெளியில் வைக்கப்பட்டது.

 

தற்போது, பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள அறிக்கையை இறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்து / ஆலோசனைகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 2023 ஆகஸ்ட் 15வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கை கல்வி அமைச்சகத்தின் (https://www.education.gov.in/) வலைத்தளம் மற்றும் "மை கவ்" போர்ட்டலில் கிடைக்கிறது. feedback_craar@iitgn.ac.in என்பதில் உங்கள் கருத்துக்களைப் பகிரலாம் அல்லது 'MyGov' போர்ட்டலைப் பார்வையிடலாம்: மேலும் விவரங்களுக்கு https://rb.gy/ui0q1.

 

****

(Release ID: 1946471)

 

SM/SMB/KRS



(Release ID: 1946521) Visitor Counter : 123