உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமானப் பயணிகளின் பயண வசதியை எளிதாக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள்
Posted On:
07 AUG 2023 2:35PM by PIB Chennai
உலகில் விரைவாக வளர்ந்து வரும் விமானச் சந்தைகளில் ஒன்றாகவும், ஏற்கனவே மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது. தற்போது, நாட்டில் 30 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
தற்போதுள்ள முனையங்களில் உள்கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் திறனை மேம்படுத்துதல், சரக்குகளை சரிபார்க்க கூடுதல் எக்ஸ்ரே இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் இயக்குதல், சிஐஎஸ்எஃப் (மத்திய தொழில் பாதுகாப்புப் படை), விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் மூலம் கூடுதல் பணியாளர்களை நியமித்தல், விமானப் பயண அட்டவணையை நிர்வகித்தல், அதிகளவில் விமானங்கள் ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்க்க விமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல் போன்ற பயணிகளின் பயணத்தை எளிதாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், விமான நிலையங்களில் பயணிகளுக்கு தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத அனுபவத்தை வழங்குவதற்காக, முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அடிப்படையிலான பயணத்திற்கான டிஜி யாத்ரா செயலியை அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, டெல்லி, பெங்களூரூ, வாரணாசி, கொல்கத்தா, புனே, விஜயவாடா மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் டிஜி யாத்ரா தொடங்கப்பட்டுள்ளது.
2022-23 சர்வதேச விமான நிலையங்களில் சராசரி மாதாந்திர பயணிகள் மற்றும் வருடாந்திர பயணிகள் கையாளும் திறன் (மில்லியனில்) அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மாதத்திற்கு சராசரியாக 1.55 மில்லியன் பயணிகளும், ஆண்டிற்கு 23 மில்லியன் பயணிகளும் கையாளப்பட்டனர். கோயம்புத்தூரில் மாதத்திற்கு 0.21 மில்லியன் பயணிகளும், ஆண்டிற்கு 3.63 மில்லியன் பயணிகளும், திருச்சியில் மாதத்திற்கு 0.13 மில்லியன் பயணிகளும், ஆண்டிற்கு 1.50 மில்லியன் பயணிகளும் கையாளப்பட்டனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு) இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
****
ANU/AP/IR/RR
(Release ID: 1946407)
Visitor Counter : 170