உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் 57 தளங்களில் 36 விமானப் பயிற்சி நிறுவனங்கள் (எஃப்.டி.ஓ) உள்ளன

Posted On: 07 AUG 2023 2:34PM by PIB Chennai

தற்போது, நாட்டில் 36 விமானப் பயிற்சி நிறுவனங்கள் (எஃப்.டி.ஓ) 57 விமானத்  தளங்களில் செயல்படுகின்றன. அவை பயிற்சியாளர்களுக்கு விமானப் பயிற்சியை வழங்குகின்றன. 2022 ஆம் ஆண்டில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) விமானத் தொழில்துறையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1165 வணிக ரீதியாக விமானங்களை ஓட்டும் விமான ஓட்டிகளுக்கான (பைலட்) உரிமங்களை (சி.பி.எல்) வழங்கியது.

பயிற்சி நிறுவனங்களை அதிகரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:

(i) 2020 ஆம் ஆண்டில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தாராளமயமாக்கப்பட்ட எஃப்.டி.ஓ வழிகாட்டுதல்களை அங்கீகரித்தது, இதில் விமான நிலைய உரிமைத்தொகை நீக்கப்பட்டு, நிலத்துக்கான வாடகைகள் கணிசமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

(ii) 2021 ஆம் ஆண்டில், ஒரு போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, பெலகாவி (கர்நாடகா), ஜல்கான் (மகாராஷ்டிரா), கலபுரகி (கர்நாடகா), கஜுராஹோ (மத்தியப் பிரதேசம்) மற்றும் லீலாபரி (அசாம்) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் ஒன்பது விமானப் பயிற்சி நிறுவனங்களை நிறுவ விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியது. ஜல்கான், லீலாபாரி, கஜுராஹோ, பெலகாவி ஆகிய இடங்களில் தலா ஒன்று, கலபுரகியில் 2 என மொத்தம் 6 எஃப்.டி.ஓ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

(iii) ஜூன் 2022-ல், ஒரு போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, பாவ்நகர் (குஜராத்), ஹூப்பள்ளி (கர்நாடகா), கடப்பா (ஆந்திரா), கிஷன்கர் (ராஜஸ்தான்) மற்றும் சேலம் (தமிழ்நாடு) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் மேலும் ஆறு எஃப்.டி.ஓ அமைக்க விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் வழங்கியது. தற்போது, சேலத்தில் (தமிழ்நாடு) ஒரு விமானப் பயிற்சி நிறுவனம் செயல்பாட்டில் உள்ளது.

(iv) விமானப் பயிற்சி நிறுவனங்களில் (எஃப்.டி.ஓ) விமானம் தொடர்பான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் உரிமையை பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்குவதற்காக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிமுறைகளை மாற்றியமைத்தது. இது ஒவ்வொரு ஒவ்வொரு பயிற்சி நிறுவனத்திலும் பயிற்சிக்காக பறக்கக்கூடிய நேரத்தையும் மற்றும் விமானங்களையும் பயன்பாட்டை அதிகரிக்க உதவியிருப்பதுடன் பைலட் உரிமங்களை விரைவாக வழங்க வழிவகுத்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் திரு. வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

ANU/AP/PLM/AG/KPG


(Release ID: 1946383) Visitor Counter : 203