வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம்
Posted On:
07 AUG 2023 1:00PM by PIB Chennai
கோவிட் -19 தொற்றுநோய் சூழல் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி (பிஎம் ஸ்வநிதி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது;
10,000 ரூபாய் வரை பிணையில்லா செயல்பாட்டு மூலதனக் கடனை வழங்குதல், முந்தையக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ .20,000 மற்றும் ரூ .50,000 உயர்த்தப்பட்ட கடன்.
ஆண்டுக்கு 7% வட்டி மானியம் மூலம், வழக்கமான திருப்பிச் செலுத்துவதை ஊக்குவித்தல்; உதாரணம்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ், தொடக்கத்தில் ரூ. 10,000 வரை செயல்பாட்டு மூலதன கடன் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்த்தப்பட்ட கடனுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, 9.04.2021 முதல் ரூ.20,000 வரை 2 வது கடனும், 1.06.2022முதல் ரூ.50,000 வரை 3 வது கடனும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்தகைய முன்மொழிவு எதுவும் அமைச்சகத்தால் பெறப்படவில்லை. இருப்பினும், அமைச்சகம் 2023 பிப்ரவரி 1 முதல் கேஷ்பேக் திட்டத்தை திருத்தியுள்ளது, இது ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 100 க்கு உட்பட்டு ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1 கேஷ்பேக் வழங்குகிறது, அதாவது ஒரு வருடத்தில்ரூ. 1200 ஆகும்.
02.08.2023 நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மொத்தம் 2,62,811 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் 2022-23 மற்றும் 2023-24 ஆம் நிதியாண்டில் (02.08.2023 வரை) வழங்கப்பட்ட மொத்த கடன்களின் எண்ணிக்கை முறையே 49,534 மற்றும் 12,097 ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான சாலையோர வியாபாரிகளைக் கண்டறிந்து புதிய விண்ணப்பங்களைத் திரட்டுவது மாநில/ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். இருப்பினும், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / கடன் வழங்கும் நிறுவனங்களுடன் வழக்கமான ஆய்வுக் கூட்டங்களை நடத்துதல், தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளூர் மொழிகளில் தகவல், கல்வி மற்றும் தொடர்பு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு.கவுஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/IR/RR
(Release ID: 1946355)
Visitor Counter : 1015