ஜல்சக்தி அமைச்சகம்
ஆக்ராவில் நடந்த தாக்க மதிப்பீட்டுக் கூட்டத்தில் உலக வங்கி செயல் இயக்குநர்களுக்கு கங்கை புத்துயிரூட்டல் குறித்து அத்திட்டத்தின் தலைமை இயக்குநர் விளக்கம்
प्रविष्टि तिथि:
06 AUG 2023 3:21PM by PIB Chennai
உலக வங்கியின்செயல் இயக்குநர்களின் பயணத்தின் ஒரு பகுதியாக 2023 ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்களுக்கு கங்கை புத்துயிரூட்டல் குறித்து தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் (என்.எம்.சி.ஜி) தலைமை இயக்குநர் திரு ஜி.அசோக் குமார் விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உலக வங்கியின் இந்திய இயக்குநர் அகஸ்டே கோமே கலந்து கொண்டார்.
திரு.ஜாக் குர்ஸ்கி, போலந்து; காலித் பவாஸியர், சவுதி அரேபியா; திருமதி ஜைனப் ஷம்சுனா அகமது, நைஜீரியா; திரு ஜுன்ஹோங் சாங், சீனா; திரு எரிவால்டோ கோம்ஸ், பிரேசில்; எர்னஸ்டோ அசெவெடோ, மெக்சிகோ; திருமதி சிசிலியா நோஹன், அர்ஜென்டினா; திரு. ராபின் டாஸ்கர், பிரிட்டன் ஆகிய ஒன்பது செயல் இயக்குநர்கள், என்.எம்.சி.ஜி., நிதித்துறை தலைவர் பாஸ்கர் தாஸ்குப்தா, என்.எம்.சி.ஜி., தொழில்நுட்ப பிரிவு டி.பி.மதுரியா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில், நதிகள் புத்துயிரூட்டலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் உலக வங்கியின் பங்கு குறித்து உலக வங்கி செயல் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக கங்கை புத்துயிரூட்டல் இயக்கத்தின் கீழ், நீர் பாதுகாப்பு நாடாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சியில், உருமாற்ற சீர்திருத்தங்கள், தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவற்றால் நீர்த் துறை முழுவதும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை செயல் இயக்குநர்கள் பாராட்டினர். மக்கள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட பல பங்குதாரர்களுடன் என்.எம்.சி.ஜி பொதுமக்களின் பங்கேற்பின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்று அவர்கள் பாராட்டினர். கங்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பங்கேற்பு முயற்சிகளால் அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.
நமாமி கங்கைத் திட்டம் குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு விரிவான விளக்கமளித்த திரு. ஜி. அசோக் குமார், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 7-8 ஆண்டுகளில் நீர்த் துறையில் நிறைய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறினார். 2019 ஆம் ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், மோதல் இல்லாமல் விரைவாக முடிவெடுக்க உதவும் வகையில் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன், பங்கேற்பு அணுகுமுறை மூலம் நிலத்தடி நீரை திறம்பட நிர்வகிப்பதற்கான அடல் புஜல் யோஜனா மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவை நீர்த் துறையில் சில முக்கிய முன்முயற்சிகளாகும், இதன் ஒரு பகுதியாக 100 மில்லியனுக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன, இது அனைவருக்கும் சுகாதாரத்தை நோக்கி உலகத்தின் சுமையை எடுத்துச் சென்றது.
இயற்கை உலகை மீட்டெடுப்பதற்கான உலகின் முதல் பத்து மறுசீரமைப்பு முன்னோடிகளில் ஒன்றாக நமாமி கங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள 160 க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இத்திட்டம், 2022 டிசம்பர் 13அன்று கனடாவின் மான்ட்ரியாலில் நடந்த ஐ.நா உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டின் போது (சிஓபி 15) வழங்கப்பட்டது. மார்ச் 2023 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீர் மாநாட்டில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே நிறுவனம் என்.எம்.சி.ஜி ஆகும்.
2021 நவம்பரில் 30 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் கீழ் நதி-நகரங்கள் கூட்டணி (ஆர்.சி.ஏ) முன்முயற்சி குறித்தும் திரு குமார் பேசினார். இப்போது, சர்வதேச நகரமான ஆர்ஹஸ் உட்பட 142 உறுப்பினர்களுடன், ஆர்.சி.ஏ நகர்ப்புற நதிகளின் நிலையான மேலாண்மைக்கான யோசனை, கலந்துரையாடல் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ள விரும்பத்தக்க தளமாக மாறியுள்ளது.
***
SM/PKV/DL
(रिलीज़ आईडी: 1946207)
आगंतुक पटल : 184