குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயகக் கோயில்கள் கிட்டத்தட்ட அழிக்கப்படுகின்றன – குடியரசு துணைத் தலைவர்

Posted On: 04 AUG 2023 7:18PM by PIB Chennai

அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்ய வேண்டிய கடமையில் ஆர்வத்துடன் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக மக்கள் இயக்கத்தைத் தொடங்குமாறு  குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

"ஜனநாயகக் கோயில்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு வருகின்றன" என்று கவலை தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், இந்த இடங்கள் விவாதம், உரையாடல்  மேடைகளாகப் பாதுகாக்கப்படாவிட்டால், அவை நாட்டு மக்களுக்கு பிரதிநிதித்துவம் அல்லது பொறுப்புக்கூறாத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மக்களை எச்சரித்தார்.

 

அரசியல் நிர்ணய சபையின் உதாரணத்தை முன்மாதிரியாக மேற்கோள் காட்டியஅவர்கருத்து வேறுபாடுகளை போராட்டங்களாக மாற்ற முடியாது என்றும், இடையூறு மற்றும் குழப்பத்திற்காக உரையாடல் மற்றும் விவாதம் கைவிடப்படுகிறது என்றும் கூறினார்.  "அரசியல் நிர்ணய  சபை பிளவுபடுத்தும் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை எதிர்கொண்டது, ஆனால் அவை எப்போதும் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு  உணர்வுடன் தீர்க்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

 

நாக்பூரில் இன்று நடைபெற்ற ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், பொருளாதார தேசியவாதத்தை நிதிக் கருத்தில் சமரசம் செய்ய முடியாது என்று வலியுறுத்தினார். "வர்த்தகம், தொழில் மற்றும் வணிகம் இது குறித்து மிகவும் உணர்திறன் கொண்டிருக்க வேண்டும். பொருளாதார தேசியவாதத்தின் முக்கியத்துவத்தை குடிமக்கள் விழிப்படையச் செய்வதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இயற்கை வளங்களின் பொறுப்பற்ற பயன்பாட்டை அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், எரிசக்தி அல்லது நீர் வளங்களை தங்கள் நிதித் திறனின் அடிப்படையில் பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை குடிமக்களுக்கு நினைவூட்டினார். "இந்த வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வது எங்கள் கடமை" என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 

உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள கௌரவம், நற்பெயர் மற்றும் அந்தஸ்தை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், "அரசியலமைப்பு அமைப்புகளை களங்கப்படுத்தவும்இழிவுபடுத்தவும் எந்தவொரு தனிநபரையும் அனுமதிக்கக்கூடாது" என்று வலியுறுத்தினார்தேச நலனுக்கு எதிரான இத்தகைய இந்திய எதிர்ப்புக் கதைகளை புறக்கணிக்க வேண்டும் என்று  குடிமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

 

மாறுபட்ட கண்ணோட்டங்களை நோக்கி திறந்த மனதுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு வலியுறுத்திய அவர்,  "மற்றவர்களின் நிலைப்பாட்டை நீங்கள் பாராட்டக் கற்றுக்கொண்டால், நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள்," என்றார். மாணவர்களின்  திறமைக்கு இடமளிக்க ஊக்குவித்த அவர், "விமர்சன ரீதியாக சிந்திக்கவும், பரவலாக படிக்கவும், தொடர்ந்து மாற்றியமைக்கவும், அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகளில் எல்லைகளை சீராக விரிவுபடுத்தவும்" அறிவுறுத்தினார்.

 

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுபாஷ் சவுத்ரி மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

****

(வெளியீட்டு ஐடி: 1945907)

 

ANU/PKV/KRS


(Release ID: 1945943) Visitor Counter : 110