பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புப் படைகளில் பெண்கள்

Posted On: 04 AUG 2023 1:59PM by PIB Chennai

தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாதுகாப்புப் படைகளில்  பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்திய ராணுவத்தில், 1,733 பெண் அதிகாரிகள் (இராணுவ மருத்துவப் படையணி  / இராணுவ பல் மருத்துவப் படையணியில் பணியாற்றி வருகின்றனர். 

இந்திய விமானப்படையில் பெண் அதிகாரிகள் (மருத்துவ மற்றும் பல் மருத்துவப் பிரிவுகள் நீங்கலாக) 1,654 ஆகும். விமானிகள் (அக்னிவீர்வாயு)- 155.

இந்திய கடற்படையில்,  பெண் அதிகாரிகள் (மருத்துவ மற்றும் பல் மருத்துவ அதிகாரிகள் நீங்கலாக)- 580. மாலுமிகள் (அக்னிவீர்)-726

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பிரிவுகள்:  ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் (ஏ.எஃப்.எம்.எஸ்) மொத்த பெண்களின் எண்ணிக்கை ;

கப்பற்படையில்- 1,212, விமானப்படையில் 151, ராணுவ மருத்துவப் படையணியில் 274 பேர்.

இராணுவ பல் மருத்துவப் படையில் முறையே , 168, 10,5 பெண்கள் பணிபுரிகின்றனர்.

இராணுவ செவிலியர் சேவை (எம்.என்.எஸ்); ராணுவம்-3,841, விமானப்படை-380, கப்பற்படை-425

இந்திய ஆயுதப் படைகளில், அவர்கள் பணியாற்றும் ஆயுதங்கள் மற்றும் சேவைகளில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகளின் பணியமர்த்தல் மற்றும் பணி நிலைமைகளில் எந்த வேறுபாடும் இல்லை. நிறுவனத் தேவைகளுக்கு ஏற்ப பணியிடங்கள் உள்ளன. பயிற்சி, பதவி உயர்வு, பதவி உயர்வு, ஈடுபாடு விதிமுறைகள் போன்றவை, பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் பொதுவானவை. இந்திய ஆயுதப் படைகளில் வேலைவாய்ப்பு தொடர்பான விதிகள் பாலின நடுநிலையானவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குகின்றன.

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945707

-----

 

ANU/SM/PKV/KPG



(Release ID: 1945900) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi , Marathi