பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

Posted On: 04 AUG 2023 2:02PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு, அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் பின்வருமாறு:

•    உள்நாட்டு வளங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை (டிஏபி 2020) அறிவிக்கப்பட்டுள்ளது.

•  மேக்-1, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டி.டி.எஃப்) மற்றும் பாதுகாப்பு உயர் சிறப்பு கண்டுபிடிப்புகள் (ஐடெக்ஸ்) போன்ற திட்டங்களுக்கு அரசு நிதி உதவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

•    பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான நான்கு பட்டியல்கள் வெளியிடப்பட்டு அவற்றின்  இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

•    டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சோதனை நிலையங்கள் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.

•   பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

•   பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் 25 சதவீதம்  தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2022-23 வரை), பாதுகாப்பு தளவாடங்களின் மூலதன கொள்முதலுக்கு 122 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

2013-14 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் துறை இறக்குமதி-ஏற்றுமதி விகிதம்: 

(ரூபாய் கோடியில்)

ஆண்டு

2013-14

2021-22

இறக்குமதி மதிப்பு (மூலதனம் + வருமானம்)

41,198.61

50,061.67

ஏற்றுமதி மதிப்பு

1,153

12,815

விகிதம் (இறக்குமதியிலிருந்து ஏற்றுமதி)

35.73

3.90

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

SM/ANU/PLM/RS/KPG

 


(Release ID: 1945789) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi , Telugu