சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மின் நீதிமன்ற திட்டத்தின் (எம்.எம்.பி) நிலை
Posted On:
03 AUG 2023 4:55PM by PIB Chennai
தேசிய மின் ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீதித்துறையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மின்னணு நீதிமன்றங்கள் இயக்க முறை திட்டம் (எம்.எம்.பி) செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு நீதிமன்றங்கள் திட்டம் நீதித் துறையால் உச்ச நீதிமன்றத்தின் மின்குழுவுடன் இணைந்து அந்தந்த உயர் நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் மின்-குழு, மின்-நீதிமன்றத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கொள்கைத் திட்டமிடல், உத்திசார் வழிகாட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இத்திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு நீதித் துறையுடன் இணைந்து உச்சநீதிமன்றம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2015 முதல் 2023 வரை செயல்படுத்தப்படுகிறது. மொத்த ஒதுக்கீடான ரூ.1670 கோடியில் இதுவரை ரூ.1668.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 18,735 மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
SM/PLM/KRS
(Release ID: 1945623)
Visitor Counter : 141