அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
प्रविष्टि तिथि:
03 AUG 2023 2:06PM by PIB Chennai
இந்திய ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான தளங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும் என்றார். ஆசியான், பிம்ஸ்டெக் போன்ற பிராந்திய ஒத்துழைப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென்னாப்பிரிக்கா ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகள் சங்கம், மனித எல்லை அறிவியல் திட்ட அமைப்பு, ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான இயக்கம், போன்றவற்றின் மூலம் பலதரப்பு ஒத்துழைப்பு தளங்கள் உருவாக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டு ஆராய்ச்சியை மையமாகக் கொண்ட 750 க்கும் அதிகமான கூட்டு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் சுமார் 100 கூட்டுப் பயிலரங்குகள்/ கருத்தரங்குகள் / இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
விளிம்புநிலை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை திட்டங்களை உருவாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
***
ANU/SM/SMB/AG/GK
(रिलीज़ आईडी: 1945544)
आगंतुक पटल : 181