விண்வெளித்துறை
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடக்கம் முதல் இறுதி வரையிலான திறன்களைக் கொண்ட விண்வெளிப் பயண நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
02 AUG 2023 4:08PM by PIB Chennai
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடக்கம் முதல் இறுதி வரையிலான திறன்களைக் கொண்ட விண்வெளிப் பயண நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்றும் நமது சொந்த நிலத்திலிருந்து செலுத்துவதற்கான திறன், புவி கண்காணிப்பு, செயற்கைக்கோள் தகவல்தொடர்பு, வானிலையியல், விண்வெளி அறிவியல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தும் திறனும் அடங்கும்.என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளித் துறை சீர்திருத்தங்களுக்குப் பின் தனியார் தொழில்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன என்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் இஸ்ரோ அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அமைச்சர் பட்டியலிட்டார். சில முக்கிய சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
இந்தக் காலகட்டத்தில் (ஜூலை 2018 - ஜூலை 2023) 27 செயற்கைக்கோள்கள் மற்றும் 22 செலுத்து வாகனத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜூன் 2018-ல்,நானோ செயற்கைக்கோள்களின் மேம்பாடு குறித்த பயிற்சி திட்டத்தை இந்தியா அறிவித்தது. 45 நாடுகளைச் சேர்ந்த 90 பங்கேற்பாளர்கள் மூன்று குழுக்களாக இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். (2019-ல் இரண்டு மற்றும் 2022-ல் 1).
இந்தியாவின் இரண்டாவது சந்திரயான் -2 ஜூலை 22, 2019 அன்று ஜி.எஸ்.எல்.வி மார்க் 3-எம் 1 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திரயான் -2 ஆர்பிட்டர் ஆராய்ச்சி சமூகத்திற்கு மதிப்புமிக்க அறிவியல் தரவுகளை வழங்குகிறது.
2019 ஆம் ஆண்டில், "ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்" என்ற அரசின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப "இளம் விஞ்ஞானி திட்டம்" என்ற வருடாந்திர சிறப்பு திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியது. 2019, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளில் நடைபெற்ற யுவிகா நிகழ்ச்சியில் மொத்தம் 603 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
25 நவம்பர் 2022 அன்று இஸ்ரோ வளாகத்தில் சென்னை அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவிய முதல் தனியார் ஏவுதளம் மற்றும் மிஷன் கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வந்தது.
பிப்ரவரி10, 2023 அன்று, சிறிய செயற்கைக்கோள் செலுத்துவாகனம் (எஸ்.எஸ்.எல்.வி - டி 2) வெற்றிகரமாக விண்ணில் செலுத்துப்பட்டது, ஈ.ஓ.எஸ் -07, ஜானஸ் -1, ஆசாதிசாட் -2 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள் (சென்னையின் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வழிகாட்டுதலில் இந்தியா முழுவதும் சுமார் 750 மாணவிகளின் கூட்டு முயற்சி) விண்ணில் செலுத்தப்பட்டன.
சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்3-எம்4 விண்கலம் கடந்த ஜூலை14-ம் தேதிவெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-----------
ANU/AP/SMB/KPG
(Release ID: 1945183)