நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சுரங்க பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
Posted On:
02 AUG 2023 2:20PM by PIB Chennai
நிலக்கரி நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தயார்நிலை தொடர்பாக விழிப்புடனும், பொறுப்புடனும், முனைப்புடனும் செயல்படுகின்றன. நிலக்கரி சுரங்கங்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்படுவதை உறுதி செய்வதே அவற்றின் முக்கிய நோக்கமாகும், இது சுரங்க ஊழியர்களை மட்டுமல்லாமல், சுரங்கங்களைச் சுற்றியுள்ள மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. நிலக்கரி சுரங்கங்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுரங்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் முறையாக திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, உரிய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
நிலக்கரித் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக நிலக்கரிச் சுரங்கங்களை பராமரிக்க நிலக்கரி நிறுவனங்கள் பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன:
டி.ஜி.எம்.எஸ் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு நிலக்கரி சுரங்கங்கள் செயல்படத் தொடங்குகின்றன. அனுமதி கடிதத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் டி.ஜி.எம்.எஸ் அதிகாரிகளால் ஆய்வுகள் மூலம் சரிபார்க்கப்படுகின்றன.
சில நேரங்களில், அதிகப்படியான மழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் கனமழை காரணமாக சில சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டது, இது எச்.இ.எம்.எம்.களின் செயல்பாட்டிற்கும், குப்பை கொட்டும் பகுதிக்கும் இடையூறாக இருந்தது. அதிகப்படியான மழையை சமாளிக்க சி.ஐ.எல் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் சுரங்கங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன:
அனைத்து சுரங்கங்களுக்கான பருவமழை செயல்திட்டம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது, இதனால் மழைக்காலங்களில் சுரங்கங்களில் உற்பத்தி சீராக தொடர்கிறது. வருடாந்திர உற்பத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் போது, மழையின் தாக்கம் மற்றும் சுரங்கங்களின் புவியியல் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக ஓபன்காஸ்ட் சுரங்கங்களுக்கு இரண்டாம் காலாண்டு அதாவது பருவமழைக் காலம் திட்டமிடப்படுகிறது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/PKV/AG/KPG
(Release ID: 1945071)
Visitor Counter : 191