கலாசாரத்துறை அமைச்சகம்
வீரமரணம் அடைந்த நமது வீரர்களை கவுரவிக்கும் வகையில் ' எனது மனம் எனது நாடு' பிரச்சாரம் தொடங்கப்படும்: பிரதமர்
Posted On:
01 AUG 2023 6:14PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, 'மனதின் குரல் ' என்ற பிரபலமான நிகழ்ச்சியின் போது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் அழகான கலாச்சார கட்டமைப்பிற்கும், பன்முகத்தன்மை எவ்வாறு ஒருங்கிணைக்கும் சக்தியாக செயல்படுகிறது என்பதற்கும் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அமிர்தப் பெருவிழா மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியின் தொடர்ச்சியான எதிரொலிகளுக்கு மத்தியில், நாட்டில் மற்றொரு பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது என்று பிரதமர் தனது சமீபத்திய மனதின் குரல் உரையில் கூறினார். வீரமரணம் அடைந்த நமது வீரர்களை கவுரவிக்கும் வகையில் ‘எனது மனம் எனது நாடு' இயக்கம் தொடங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதன் கீழ், நமது அழியாத தியாகிகளின் நினைவாக நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த மேதைகளின் நினைவாக, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும். இந்தப் பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் 'அமிர்த கலச யாத்திரை' ஏற்பாடு செய்யப்படும்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் 7500 கலசங்களில் மண்ணைச் சுமந்து செல்லும் இந்த 'அமிர்த கலச யாத்திரை' நாட்டின் தலைநகரான தில்லியை அடையும் என்று அவர் மேலும் கூறினார். இந்தப் பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரக்கன்றுகள் கொண்டு வரப்படும். தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே 7500 தொட்டிகளில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை இணைத்து 'அமிர்த வாடிகா' கட்டப்படும். இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் மகத்தான அடையாளமாகவும் மாறும்.
அம்ரித் சரோவர்ஸ் என்னும் அமிர்த நீர்நிலைகள் குறித்து பேசிய திரு. நரேந்திர மோடி, 'மரம் வளர்ப்பு' மற்றும் 'நீர் சேமிப்பு' ஆகியவற்றிற்கு இந்த மழை கட்டம் சமமாக முக்கியமானது என்று கூறினார். 'விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது உருவாக்கப்பட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் தங்கள் பளபளப்பை அதிகரித்து வருகின்றன. தற்போது, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. நமது நாட்டு மக்கள் முழு விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் 'நீர் சேமிப்பிற்காக' புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்கும் நோக்கில்24ஏப்ரல் 2022 அன்று இது தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-
ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் பங்களிப்புடன் "முழு அரசு" அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது அமிர்த நீர்நிலைகள் இயக்கம்.
இந்த இயக்கத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தது 75 நீர்நிலைகளை உருவாக்கும் அல்லது புதுப்பிக்கும்.
ஒவ்வொரு நீர்நிலையிலும் குறைந்தது 1 ஏக்கர் பரப்பளவும், சுமார் 10,000 கன மீட்டர் நீர் தேக்கும் திறனும் இருக்கும்.
ஒவ்வொரு நீர்நிலையும் வேம்பு, அரசமரம் மற்றும் ஆலமரம் போன்ற மரங்களால் சூழப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு அமிர்த நீர்நிலையும் நீர்ப்பாசனம், மீன்வளம், வாத்து வளர்ப்பு, சாகுபடி, நீர் சுற்றுலா மற்றும் பிற நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கான ஆதாரமாக இருக்கும். அந்தப் பகுதியில் ஒரு சமூக ஒன்றுகூடும் இடமாகவும் இது செயல்படும்.
இந்தியாவின் வளமான மற்றும் பன்முக பாரம்பரியத்தில் கலை மற்றும் கலாச்சாரம் ஒரு முக்கிய பகுதியாகும். மனதின் குரல் 103வதுஅத்தியாயத்தில் இந்தியாவின் வளமான பாரம்பரியம் குறித்து பேசிய பிரதமர், "நமது பாரம்பரியத்தை தழுவுவது மட்டுமல்லாமல், அதை உலகிற்கு பொறுப்புடன் முன்வைப்போம். இந்த நாட்களில் உஜ்ஜயினியில் அத்தகைய ஒரு முயற்சி நடந்து கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு நாடு முழுவதிலுமிருந்து 18 ஓவியர்கள் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சிகரமான படக் கதை புத்தகங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த ஓவியங்கள் புந்தி பாணி, நாதத்வாரா பாணி, பஹாரி பாணி மற்றும் அபப்ரம்ஷ் பாணி போன்ற பல தனித்துவமான பாணிகளில் வரையப்படும். இவை உஜ்ஜைனியின் திரிவேணி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.
பழங்காலத்திலிருந்தே , போஜ்பத்ராக்கள் குறித்து நமது வேதங்களும் புத்தகங்களும் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். மகாபாரதமும் போஜ்பத்ராவில் எழுதப்பட்டது. இன்று, தேவபூமியின் (உத்தரகண்ட்) பெண்கள் போஜ்பத்ராவிலிருந்து மிகவும் அழகான கலைப்பொருட்கள் மற்றும் நினைவுப்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இன்று, போஜ்பத்ராவின் தயாரிப்புகள் இங்கு வரும் யாத்ரீகர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன, மேலும் அதை நல்ல விலைக்கு வாங்குகின்றன. போஜ்பத்ராவின் இந்த பண்டைய பாரம்பரியம் உத்தரகண்ட் பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய வண்ணங்களை நிரப்புகிறது.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, முழு நாடும் 'வீடு தோறும் மூவண்ணக் கொடி இயக்கம் ' திட்டத்திற்காக ஒன்றிணைந்ததை குறிப்பிட்ட பிரதமர், இந்த முறையும் நாம் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என்றும், இந்த பாரம்பரியத்தைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
****
(Release ID: 1944774)
ANU/AP/PKV/KRS
(Release ID: 1944867)
Visitor Counter : 227