சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவன ஒழுங்குமுறை பற்றிய புதுப்பிப்பு

Posted On: 01 AUG 2023 2:23PM by PIB Chennai

தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) சட்டம், 2019 இன் கீழ் மருத்துவ நிறுவனங்கள் (அரசு மற்றும் தனியார்)என்.எம்.சி வகுத்த தரங்களுக்கு ஏற்ப  மதிப்பிடுவதற்கு  இந்திய அரசு மருத்துவ மதிப்பீட்டு வாரியத்தை (எம்.ஏ.ஆர்.பி) நிறுவியுள்ளது.

மருத்துவ அலட்சியம் தொடர்பான வழக்குகள் / புகார்கள்மாநில / யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில மருத்துவ கவுன்சிலால் கையாளப்படுகின்றன. மாநில மருத்துவ கவுன்சில் எடுத்த முடிவில் புகார்தாரர் அல்லது பிரதிவாதி திருப்தி அடையவில்லை என்றால்அவர்  நெறிமுறைகள் மற்றும் மருத்துவ பதிவு வாரியம்தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

நோயாளிகளுக்கு மலிவான கட்டணத்தில்  தரமான சுகாதார வசதிகளை வழங்க சிஇ  சட்டம்  2010 வகை செய்கிறது. சிஇ சட்டத்தின் பதிவு நிபந்தனைகள் பின்பற்றப்படாவிட்டால்மருத்துவமனைகளின் பதிவை ரத்து செய்யவும் வழிவகுக்கிறது. தற்போதைய நிலவரப்படிசிஇ சட்டம், 2010,  12 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

****

ANU/PKV/GK



(Release ID: 1944709) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Bengali , Telugu