குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மஹாராஷ்டிரா மாநிலம் ஷஹாபூரில் நடந்த கோர விபத்துக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்
Posted On:
01 AUG 2023 12:55PM by PIB Chennai
மஹாராஷ்டிரா மாநிலம், ஷஹாபூரில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் பிரார்த்தனை தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"மகாராஷ்டிராவின் ஷஹாபூரில் நடந்த துயரமான விபத்தில் நேரிட்ட உயிர் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்"
***
ANU/PKV/GK
(Release ID: 1944702)
Visitor Counter : 135