தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
Posted On:
31 JUL 2023 5:42PM by PIB Chennai
அமைப்புசாரா தொழிலாளர்கள் 60 வயதை எட்டிய பின், மாதந்தோறும், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் வகையில், 'பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் மாதாந்திர நிதி ' என்ற ஓய்வூதிய திட்டத்தை, மத்திய அரசு, 2019ல் தொடங்கியது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் maandhan.in இணையதளம் மூலமாகவோ அல்லது ஏதேனும் பொது சேவை மையத்திற்குச் சென்று சுய பதிவு செய்வதன் மூலமாகவோ இத்திட்டத்தில் கட்டணமின்றி பதிவு செய்யலாம். நாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்கள் உள்ளன. இது தன்னார்வ மற்றும் இணை பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.
மாத வருவாய் ரூ.15,000/- அல்லது அதற்கும் குறைவாக உள்ள, ஈ.பி.எஃப்.ஓ / இ.எஸ்.ஐ.சி / என்.பி.எஸ் (அரசு நிதியுதவி) உறுப்பினராக இல்லாத 18-40 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளி செலுத்த வேண்டிய 50% பங்களிப்புத் தொகை வயதைப் பொறுத்து மாதாந்திர பங்களிப்பு ரூ.55/- முதல் ரூ.200/- வரை மாறுபடும். இதற்கு சமமான, பொருத்தமான பங்களிப்பு மத்திய அரசால் செலுத்தப்படும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் இத்திட்டத்தின் நிதி மேலாளராக உள்ளது.
2020-21 காலமுறையிலான தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, மொத்தம் 46.5% பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வ. எண்
|
ஆண் (%)
|
பெண் ( %)
|
மொத்தம் ( %)
|
1.
|
39.8%
|
62.2%
|
46.5%
|
இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.
***
ANU/AD/SMB/KPG
(Release ID: 1944469)
Visitor Counter : 354