சுரங்கங்கள் அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு
Posted On:
31 JUL 2023 4:16PM by PIB Chennai
இந்திய புவியியல் ஆய்வு மையம் 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்- ஹைம்னா பகுதிகளில் பாக்சைட், அரிய தனிமங்கள் மற்றும் லித்தியம் குறித்த கனிம ஆய்வு திட்டத்தை மேற்கொண்டது. இதில் 5.9 மில்லியன் டன் லித்தியம் தாதுவின் வளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைம்னாவின் கனிமத் தொகுதிப் பகுதியில் ஆங்காங்கே வீடுகள் உள்ளன. லித்தியம் வகை, தாதுவின் பண்புகள் மற்றும் லித்தியம் சேர்மங்களின் உத்தேசிக்கப்பட்ட இறுதி பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து லித்தியம் தாதுவின் செயலாக்கம் மற்றும் சுத்திகரிப்பு முறைகள் மாறுபடும். லித்தியம் தாதுவை லித்தியம் கனிம அடர்த்தியுடன் இணைப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஆய்வக அளவில் கனிம அடர்த்தியிலிருந்து லித்தியத்தை பிரித்தெடுப்பதில் வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள லித்தியம் கனிமத் தொகுதியை ஏலம் விடுவது குறித்த முடிவை ஜம்மு-காஷ்மீர் அரசு எடுக்கும்.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
********
ANU/PLM/KPG
(Release ID: 1944448)
Visitor Counter : 123