சுரங்கங்கள் அமைச்சகம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தங்க இருப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2023 4:20PM by PIB Chennai
இந்திய கனிமங்கள் ஆண்டு புத்தகம் 2021 இன் படி, 01.04.2020 வரை, ஆந்திராவில் 47.17 டன் கனிமங்கள் உள்ளன. இதில், 41.87 டன் தங்கமாகும். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வின்படி, சிகார்குண்டா - பிசாநத்தம் பகுதிக்கு தெற்கே ராமகிரி தங்க வயல், பெனகசெர்லா தங்க வயல், ஜோனகிரி சிஸ்ட் பெல்ட், பிசாநத்தம் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் பதிவாகியுள்ளன.
எம்.எம்.டி.ஆர் சட்டம், 2015 அமல்படுத்தப்பட்ட பின்னர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிகர்குண்டா மற்றும் பிசாநத்தம் தங்க சுரங்கங்கள் குறித்த புவியியல் அறிக்கைகள் ஆந்திர மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளின் மதிப்பீடுகள் பின்வருமாறு:
சிகர்குண்டா சுரங்கம் -1-ல் சராசரியாக 5.20 பிபிஎம் தங்கத்துடன் 1.6573 மில்லியன் டன் தாதுவும், இவ்வட்டாரத்தில் சராசரியாக 5.73 கிராம் / டன் என்ற அளவில் மொத்தமாக 2.04 மில்லியன் டன்னும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிசாநத்தம் : பிசாநத்தம் வட்டாரத்தில் 4.70 கிராம்/டன் சராசரி தரத்தில் 173478 டன் தாது வளம் மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
ANU/CR/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1944443)
வருகையாளர் எண்ணிக்கை : 154