சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மாவட்ட கனிம அறக்கட்டளையின் கீழ் இந்த ஆண்டு ஜூன் 30 வரை ஒடிசா ரூ. 23,120 கோடி பெற்றுள்ளது

Posted On: 31 JUL 2023 4:21PM by PIB Chennai

ஒடிசா-வில் மாவட்ட கனிம அறக்கட்டளையின் கீழ் 2023 ஜூன் 30 ஆம் தேதி வரை ரூ. 23,120 கோடி நிதி பெறப்ப்பட்டுள்ளது. இதில் ரூ.17,755.20 கோடி நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தவிர்ந்த பிற முக்கிய கனிமங்களிலிருந்தும், ரூ. 5237.58 கோடி நிலக்கரி, பழுப்பு நிலக்கரியிலிருந்தும், ரூ.127.21 கோடி சிறு கனிமங்களிலிருந்தும் பெறப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் மாவட்டக் கனிம அறக்கட்டளை (டி.எம்.எஃப்) விதிகளின்படி, குறைந்தபட்சம் 60 சதவீத நிதி உயர் முன்னுரிமை நடவடிக்கைகளுக்கும், 40 சதவீதம் வரை பிற முன்னுரிமை நடவடிக்கைகளுக்கும் செலவிடப்பட வேண்டும்.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, டி.எம்.எஃப்.கள் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் நிதி ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிக்கவும், நடைபெற்று வரும் திட்டங்களில் டி.எம்.எஃப் நிதியைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்தவும் ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

  

********

 ANU/PLM/KPG(Release ID: 1944436) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Odia , Kannada