வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2273.44 கோடி மதிப்பிலான 108 திட்டங்களுக்கு என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
Posted On:
31 JUL 2023 4:12PM by PIB Chennai
வடகிழக்குப் பகுதி சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (என்இஎஸ்ஐடிஎஸ்) கீழ் நீர் வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் திட்டங்களும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2273.44 கோடி மதிப்பிலான 108 திட்டங்களுக்கு என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
********
ANU/PLM/KPG
(Release ID: 1944416)
Visitor Counter : 131