மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களுக்கான இரண்டாம் கட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான தேதி 30 ஆகஸ்ட், 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Posted On: 31 JUL 2023 3:44PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்ப வன்பொருட்களுக்கான  உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு, 29 மே, 2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.  ரூ. 17,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. நாட்டில் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் https://www.meity.gov.in/esdm/production-linked-incentive-scheme-pli-20-it-hardware என்ற தளத்தில் 14.07.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பொறுவதற்கான தேதி ஆகஸ்ட் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு https://2.pliithw.com/login என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1944283    

********

ANU/PLM/AG



(Release ID: 1944356) Visitor Counter : 99