வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர திட்டமிடல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

Posted On: 31 JUL 2023 2:01PM by PIB Chennai

2022-23 ஆம் ஆண்டிற்கான மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீட்டிலும், 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீட்டிலும் மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் தொடங்கப்பட்டது.  "நகர்ப்புற சீர்திருத்தங்களுக்கான" திட்டத்தின் ஆறாம் பகுதியின் கீழ் பங்கேற்கும் 13 மாநிலங்களுக்கு ரூ. 4598.22 கோடியை விடுவிக்குமாறு நிதி அமைச்சகத்திற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் பரிந்துரைத்தது. இதில் மொத்தம் ரூ. 4093.16 கோடியை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. இந்த ஊக்கத் தொகையை 2023 மார்ச்31-ம் தேதிக்குள் பயன்படுத்துவதற்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு செலவினத் துறையிலிருந்து விடுவிக்கப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மாநிலங்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகைகளின் பயன்பாட்டைக் கண்காணிப்பதில்லை.

மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மாநாடுகள் மற்றும் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  சமீபத்தில் ஜூலை 13 மற்றும் 14, 2023 அன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், நிலையான நகரங்களை உருவாக்குவதற்கான தேசிய நகர்ப்புற திட்டமிடல் மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி), ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜிஐசிஏ) போன்ற பலதரப்பு நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அம்ருத் திட்டத்தில் புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில் முழுமையான திட்டத்தை உருவாக்குவதற்கான துணைத் திட்டத்தின் கீழ், 77 பயிற்சிகள் நடத்தப்பட்டு, 2900 அலுவலர்களுக்கு நகர்ப்புற திட்டமிடலில் புவியியல் தகவல் அமைப்பு மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கெளஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1944254     

********

 ANU/PLM/AG


(Release ID: 1944272) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi , Telugu