எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் பகிர்மானக் கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம்

Posted On: 30 JUL 2023 1:06PM by PIB Chennai

கணக்கிடுதல், அறிக்கை வழங்குதல், மின் பகிர்மானக் கழகங்களுக்கு மாநிலங்கள் வழங்கும் மானியத்தை சீர்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளோடு மின் பகிர்மானக் கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. துறையின் நிலைத்தன்மைக்கான ஒரு கட்டமைப்பின் தேவையையும், முறையற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற கணக்கீடு மற்றும் மாநிலங்களால் அறிவிக்கப்பட்ட மானியத்தை செலுத்தாதது அல்லது தாமதமாக செலுத்துவதும் பகிர்மான கழகங்களின் நிதி நெருக்கடிக்கு ஒரு காரணம் என்ற நிலைமையை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 26,2023 அன்று எரிசக்தி அமைச்சகம் விதிகளை அறிவித்தது.

 

விதிகளின்படி, காலாண்டு அறிக்கை, அந்தந்த காலாண்டின் கடைசி தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் விநியோக உரிமைதாரரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட முப்பது நாட்களுக்குள் மாநில ஆணையம் அறிக்கையை ஆய்வு செய்து வெளியிட வேண்டும்.  மானியப் பிரிவினர் பயன்படுத்தும் மின்சாரத்தின் கணக்குகளின் அடிப்படையில் மானியத் தேவைகள் எழுப்பப்படுவது தொடர்பான தகவல்களும், மாநில அரசால் அறிவிக்கப்பட்டபடி இந்த பிரிவினருக்கு செலுத்த வேண்டிய மானியம் மற்றும் சட்டப் பிரிவு 65 இன் படியான உண்மையான மானியம் சம்பந்தமான தகவல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும்.

 

மானியக் கணக்கீடு மற்றும் மானியத்திற்கான கட்டணங்களை உயர்த்துதல் ஆகியவை சட்டம் அல்லது அதன் கீழ் வெளியிடப்பட்ட விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளின்படி கண்டறியப்படாவிட்டால், மாநில ஆணையம் சட்டத்தின் விதிகளின்படி இணங்காதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

***

AP/RB/DL


(Release ID: 1944140) Visitor Counter : 190