ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்தியாவில் சர்வதேச ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள் குறித்த 3-வது உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

Posted On: 27 JUL 2023 7:35PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் “இந்தியாவில் சர்வதேச ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தி மையங்கள்” (ஜிசிபிஎம்எச் 2023) குறித்த உச்சிமாநாட்டின் 3வது பதிப்பை இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் ஸ்ரீ பகவந்த் குபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஒடிசா மாநில அரசின் தொழில்துறை, குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஸ்ரீ பிரதாப் கேசரி, ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை செயலாளர் ஸ்ரீ அருண் பரோகா, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெட்ரோ கெமிக்கல்ஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீ பிரப் தாஸ் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தொழில்துறையின் மூத்த தலைமையாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் உருவாகி வரும் வாய்ப்புகள் குறித்து ஆர்வத்துடன் இருந்த பலர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) உடன் இணைந்து இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், திருமதி. நிர்மலா சீதாராமன், இந்திய ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறைக்கு மிகப் பெரிய ஆற்றல் உள்ளது என்றும் அது பொருளாதாரத்தின் மற்ற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். விவசாயம், உள்கட்டமைப்பு, ஜவுளி, மருந்தியல், பேக்கேஜிங் போன்ற துறைகளை உள்ளடக்கிய 80,000 க்கும் மேற்பட்ட ரசாயன தயாரிப்புகளை இது கையாளுவதில் இருந்து இத்துறையின் முக்கியத்துவத்தை அளவிட முடியும்.

இந்தியா 2047-ல் எரிசக்தி துறையில் தன்னிறைவு அடையவும் மற்றும் 2070-ல் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். பசுமை எரிசக்தி வளர்ச்சி மற்றும் கார்பன் தீவிரத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 2022-23 ஆம் ஆண்டில் முக்கிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி 9 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும், ஆனால் இறக்குமதியும் 13.33 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இந்த இறக்குமதிகளில் பல இந்தியாவிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை உள்ளடக்கியது. எனவே அரசு இதனைக் கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுக்கு 12% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆர்) அதிவேகமாக வளர்ந்து வரும் சிறப்பு ரசாயனங்களின் சந்தையையும் நிதி அமைச்சர் கவனத்தில் கொண்டு வந்தார். எனவே, சிறப்பு ரசாயனங்களுக்கு இன்னும் வலுவான ஆதரவு முக்கியமாகிறது. இந்த சந்தையின் வெளிப்பாடு நாட்டின் வலுவான செயல்முறை பொறியியல் திறன்கள், குறைந்த விலையிலான உற்பத்தி திறன்கள் மற்றும் ஏராளமான மனிதவளத்தால் இயக்கப்படுகிறது.

நாட்டில் ரசாயன தொழில் பூங்காக்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருவதாகவும், பிளாஸ்டிக் பூங்காக்கள் அமைக்கும் செயல்முறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும் ஸ்ரீ பக்வந்த் குபா கூறினார். திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்க, சிறப்பு மையங்களை அரசு உருவாக்குகிறது. ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையின் சந்தை அளவு சுமார் 190 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2025-ல் 300 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2040-ல் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் பெரும் முதலீட்டு வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீ பிரதாப் கேசரி தேப் தனது உரையில், அரசு உள்நாட்டில் ரசாயனத் துறையில் 8 சதவிகிதம் வளர்ச்சியடைந்து உள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இதைத் தக்கவைக்க, ஒடிசாவின் திறனில் 40 சதவிகித வளர்ச்சி தேவைப்படும் என்றும் கூறினார். ஒடிசாவின் தொழில் கொள்கைத் தீர்மானம் 2022, உற்பத்தி அலகுகளுக்கு வரிச் சலுகைகள், மின் வரி விலக்கு போன்ற விதிகளுடன் தொழில்துறைக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

செயலாளர் ஸ்ரீ அருண் பரோகா கூறுகையில், அதிகரித்து வரும் தேவையுடன் கொள்கை சீர்திருத்தங்களின் ஆதரவுடன் ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் இந்தியா மிக உயர்ந்த வளர்ச்சி நிலையை எட்ட தயாராக உள்ளது. தற்போதைய விகிதத்தில் இந்தியா வளர்ச்சியடைந்தால், 2047-ம் ஆண்டிற்குள் ரசாயனத் துறை முதலீடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும். நான்கு பெட்ரோலியம், ரசாயனம் & பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு பகுதிகள் (பிசிபிஐஆர்) இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனுடன் முன்மொழியப்பட்ட ரசாயன தொழில் பூங்காக்கள் தொழில்துறை விரைவாக வளர உதவும்.


(வெளியீட்டு எண்: 1943414)

***


(Release ID: 1943849) Visitor Counter : 136


Read this release in: Telugu , English , Urdu , Hindi