சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோகியாவுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் பாராட்டு
Posted On:
27 JUL 2023 5:36PM by PIB Chennai
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வரலாறு படைத்த சர்வதேச பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங்லோகியாவுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய திரு வீரேந்திர குமார், சதேந்திர சிங் லோகியா தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். சதேந்திர சிங் லோகியாவுடன் அவரது பயணம், சாதனைகள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.
சதேந்திர சிங் லோகியா, மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகளையும் சந்தித்தார். குவாலியரில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு மையத்திற்காக திரு. ராஜேஷ் அகர்வால் திரு. சதேந்திர சிங் லோகியாவிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றார்.
இந்த பாராட்டுகளுக்காக அமைச்சர் திரு வீரேந்திர குமார் மற்றும் திரு ராஜேஷ் அகர்வால் ஆகியோருக்கு சதேந்திர சிங் நன்றி தெரிவித்தார்.
******
ANU/PKV/KPG
(Release ID: 1943432)
Visitor Counter : 118