வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் குப்பையில்லா நகரங்கள்
Posted On:
27 JUL 2023 4:07PM by PIB Chennai
நாட்டின் நகர்ப்புறங்களில் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக பதப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு 2014-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கியது.
100 சதவீதம் பிரித்தல், வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரித்தல் மற்றும் அறிவியல் பூர்வமாக, பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான செயல்பாடுகளின் மூலம் அனைத்து நகரங்களும் குப்பையில்லா நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டு நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டம் (எஸ்பிஎம்-யு 2.0) 2021 அக்டோபர் 1 அன்று ஐந்து ஆண்டு காலத்திற்கு தொடங்கப்பட்டது. அனைத்து பாரம்பரிய குப்பைக் கிடங்குகளையும் சரிசெய்து அவற்றை பசுமை மண்டலங்களாக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த ரூ.1,41,600 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.36,465 கோடியாக இருக்கும். மீதமுள்ள தொகையை பயனாளிகளின் பங்களிப்பாக தனிநபர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்/ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்/ தனியார் துறை ஆகியவை தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் செலுத்துவார்கள்.
சுகாதாரம் என்பது அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் கீழ் மாநில விஷயமாகும். எனவே, நாட்டின் நகர்ப்புறங்களில் சுகாதாரத் திட்டங்களைத் திட்டமிடுவது, வடிவமைப்பது, செயல்படுத்துவது மற்றும் செயல்படுத்துவது மாநில / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். இருப்பினும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கூடுதல்நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் இதில் வசதிகளைச் செய்து தருகிறது.
இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கவுஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(Release ID: 1943324)
Visitor Counter : 168