வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வடகிழக்குப் பகுதியின் கைவினைக் கலைகளை ஊக்குவித்தல்

Posted On: 27 JUL 2023 3:02PM by PIB Chennai

வடகிழக்குப் பகுதி கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகமான என்.இ.எச்.எச்.டி.சி, வடகிழக்கு பிராந்தியத்தின் (என்.இ.ஆர்) கைவினைப்பொருட்களுக்குச் சிறந்த சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், அப்பகுதிக் கைவினைக் கலைஞர்களுக்கு பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

என்.இ.எச்.எச்.டி.சி தமது இ-காமர்ஸ் இணையதளமான https://purbashree.com என்ற தளத்தை அறிமுகப்படுத்தியதுடன் மொபைல் விற்பனை நிலையங்களை இயக்குகிறது.  அமேசான், இந்தியா மார்ட், டிரேட் இந்தியா, பிளிப்கார்ட், கோகூப், ஜிஇஎம் மற்றும் ஈ.டி.எஸ்.ஒய் ஆகிய நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சந்தைகளுடன் இணைக்கின்றன. வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்தல் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பாக என்.இ.எச்.எச்.டி.சி பல்வேறு நிறுவனங்களுடன் 30 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது;

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் திறன் இந்தியா என்ற முதன்மை திட்டத்தின் கீழ் தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலில் (என்.எஸ்.டி.சி) ஒரு பயிற்சி கூட்டு நிறுவனமாக (டி.பி) என்.இ.எச்.எச். டி.சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை மேம்பாட்டு சம்மேளனம் (டிரைஃபெட்), வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடியினர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக என்.இ.எச்.எச்.டி.சி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் என்.இ.எச்.எச்.டி.சி-யின் விற்பனை:

2020-21 -  ரூ. 105.87 லட்சம்;

2021-22 – ரூ. 369.22 லட்சம்

2022-23 – ரூ. 565.22 லட்சம்

இத்தகவலை வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

                                                                                                                  ******

ANu/PLM/KPG

 



(Release ID: 1943256) Visitor Counter : 126


Read this release in: Bengali , English , Urdu , Manipuri