நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030 க்குள் 100 மில்லியன் டன் நிலக்கரி எரிவாயுமயமாக்கலில் கவனம்

Posted On: 26 JUL 2023 3:44PM by PIB Chennai

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

நிலக்கரி வாயுமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக, நிலக்கரி அமைச்சகம் ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளது, அதில், எரிவாயுமயமாக்கலுக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் அளவு மொத்த நிலக்கரி உற்பத்தியில் குறைந்தது 10% ஆக இருந்தால், எரிவாயுமயமாக்கலுக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கான எதிர்கால வணிக நிலக்கரித் தொகுதி ஏலங்களுக்கு வருவாய் பங்கில் 50% தள்ளுபடிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய நிலக்கரி எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நிலக்கரி கிடைப்பதற்காக என்.ஆர்.எஸ் பிரிவின் கீழ் தனி ஏல சாளரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக நிலக்கரி உற்பத்தி விவரம் பின்வருமாறு:

 

(மில்லியன் டன்களில்)

 

ஆண்டு

 

நிலக்கரி உற்பத்தி

 

2018-19

 

728.718

 

2019-20

 

730.874

 

2020-21

 

716.083

 

2021-22

 

778.210

 

2022-23(Prov.)

 

893.190

மின்துறை மற்றும் ரயில்வே துறையின் தேவையை கோல் இந்தியா லிமிடெட் பூர்த்தி செய்து வருகிறது. 2022-23 நிதியாண்டில், 565 மில்லியன் டன் என்ற இலக்கில், சிஐஎல் 586.6 மில்லியன் டன்களை மின் துறைக்கு அனுப்பியுள்ளது. ரயில்வேயின் தேவையை பூர்த்தி செய்வதைப் பொறுத்தவரை, ரயில்வேயின் (லோகோ) நிலக்கரி தேவை மிகக் குறைவு. ரயில்வேயின் நிலக்கரி தேவையை அவ்வப்போது சி.ஐ.எல் தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறது.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1942811)

ANU/PKV/KRS


(Release ID: 1943035) Visitor Counter : 128


Read this release in: Urdu , Telugu , English