நிலக்கரி அமைச்சகம்
விரைவான நிலக்கரி போக்குவரத்திற்காக 13 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன
प्रविष्टि तिथि:
26 JUL 2023 3:45PM by PIB Chennai
நிலக்கரித் துறையில் மத்திய அரசு பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
நிலக்கரி வெளியேற்றம் மற்றும் விநியோக திறன்களை மேம்படுத்த நிலக்கரி அமைச்சகம் ரயில்வே அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தற்போது, நிலக்கரி விநியோக திறன்களை விரிவுபடுத்துவதற்காக ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து 13 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, அவை கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன.
885 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 67 முதல் மைல் இணைப்பு (எஃப்.எம்.சி) திட்டங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரி கையாளும் திறனை அடைய 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. பிரதமர் விரைவு சக்தியின் இலக்கிற்கு ஏற்ப, நிலக்கரி அமைச்சகம் ரூ.26,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரி அமைச்சகங்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் அடங்கிய துணைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்பைப் பொறுத்து துணைக் குழு ரேக்குகள் விநியோகத்தை உறுதி செய்கிறது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PKV/RJ
(रिलीज़ आईडी: 1942998)
आगंतुक पटल : 146