பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஸ்வமித்வா திட்டத்தின் சாதனை

Posted On: 26 JUL 2023 1:55PM by PIB Chennai

கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரித்தல் (ஸ்வாமித்வா) திட்டம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில வருவாய்த் துறை, மாநில பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் இந்திய நில அளவைத் துறை (எஸ்ஓஐ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலப் பரப்புகளை  வரைபடமாக்குவது இந்திய நில அளவைத் துறையால் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநிலங்கள் இத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதுவரை 31 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் வரைபடமாக்கப்பட்ட கிராமங்களின் முன்னேற்றம் குறித்த மாநில வாரியான மற்றும் ஆண்டு வாரியான விவரங்கள் இணைப்பு 1ல் இணைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் மாநிலங்களின் அனைத்து கிராமப்புற மக்கள் வசிக்கும்  பகுதிகளையும், சுமார் 6 லட்சம் கிராமங்களையும் உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இந்தத்  திட்டத்தை செயல்படுத்தும் போது, கணக்கெடுக்க வேண்டிய கிராமங்களின் உண்மையான எண்ணிக்கை பின்வரும் காரணங்களுக்காக திருத்தப்பட்டுள்ளது:

 இந்திய நில அளவைத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பீகார், மேற்கு வங்கம், நாகாலாந்து, மேகாலயா போன்ற மாநிலங்களில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

சிக்கிம், தெலங்கானா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் போன்ற சில மாநிலங்கள் முன்னோடி கிராமங்களில் மட்டுமே இந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உரிமைகள் குறித்த முன் பதிவுகள் இல்லாத கிராமங்களில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இணைப்பு

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் ட்ரோன் சர்வே கிராமங்களின் மாநில வாரியான விவரங்கள்

(17.07.2023 நிலவரப்படி)

 

மாநிலம்

நி.. 2020-21

நி.. 2021-22 (ஒட்டுமொத்தமாக)

நி.. 2022-23

(ஒட்டுமொத்தமாக)

நி.. 2023-24

(ஒட்டுமொத்தமாக)

1

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

 

140

140

186

2

ஆந்திரப் பிரதேசம்

521

1,793

5,383

10,834

3

அருணாச்சலப் பிரதேசம்

 

129

1,577

2,171

4

அசாம்

 

36

362

891

5

சத்தீஸ்கர்

 

1,771

7,966

11,440

6

தாத்ரா,நாகர் ஹவேலி, டாமன், டையூ

 

77

77

80

7

தில்லி

 

 

31

31

8

கோவா

 

412

410

410

9

குஜராத்

 

619

7,134

10,943

10

ஹரியானா

5,781

6,260

6,260

6,260

11

இமாச்சலப் பிரதேசம்

 

464

4,851

7,768

12

ஜம்மு காஷ்மீர்

 

748

1,469

1,925

13

ஜார்க்கண்ட்

 

240

240

240

14

கர்நாடகா

1,292

2,415

3,589

6,703

15

கேரளா

 

23

142

184

16

லடாக்

 

5

168

192

17

லட்சத்தீவுகள்

 

8

10

10

18

மத்தியப் பிரதேசம்

3,592

22,897

42,853

43,014

19

மகாராஷ்டிரா

5,075

16,302

35,916

36,499

20

மணிப்பூர்

 

0

148

209

21

மிசோராம்

 

48

164

215

22

ஒடிசா

 

257

1,837

2,411

23

புதுச்சேரி

 

96

96

96

24

பஞ்சாப்

146

743

4,605

6,372

25

ராஜஸ்தான்

69

1,790

15,013

21,840

26

சிக்கிம்

 

1

1

1

27

தமிழ்நாடு

 

3

3

3

28

தெலங்கானா

 

0

5

5

29

திரிபுரா

 

3

3

3

30

உத்தரப் பிரதேசம்

19,097

59,147

89,534

90,902

31

உத்தராகண்ட்

3,803

7,441

7,441

7,441

 

மொத்தம்

39,376

1,23,868

2,37,428

2,69,279

 

இத்தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

*************

ANU/SMB/KPG

 



(Release ID: 1942804) Visitor Counter : 107


Read this release in: English , Manipuri , Urdu , Telugu