உள்துறை அமைச்சகம்
மாநிலங்களின் தீயணைப்புத் துறைகளை விரிவுபடுத்தி, நவீனப்படுத்தும் திட்டம்
प्रविष्टि तिथि:
25 JUL 2023 4:53PM by PIB Chennai
2025-26 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், மாநிலங்களின் தீயணைப்பு சேவைகளை வலுப்படுத்துவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் (என்.டி.ஆர்.எஃப்) கீழ் தயார்நிலை மற்றும் திறன் மேம்பாட்டு நிதிப் பிரிவின் ஒதுக்கீட்டிலிருந்து 04.07.2023 அன்று "மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதற்கான திட்டம்" ஒன்றை அரசு ரூ. 5,000 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு செலவு பகிர்வு அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் தீயணைப்பு சேவைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைத்தல், மாநிலப் பயிற்சி மையங்களை வலுப்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு, நவீன தீயணைப்பு உபகரணங்களுக்கு ஏற்பாடு செய்தல், மாநில தலைமையகம் மற்றும் நகர்ப்புற தீயணைப்பு நிலையங்களை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாடு போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.
தீயணைப்புத் துறை என்பது மாநிலங்கள் சம்பந்தப்பட்ட துறையாகும். மாநிலங்களில் தீ விபத்துகள் மற்றும் தீ தொடர்பான சம்பவங்கள் தொடர்பான எந்தத் தரவையும் மத்திய அரசு பராமரிப்பதில்லை.
தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மாநில அரசுகளின் முதன்மைப் பொறுப்பாகும். மத்திய அரசு 16.09.2019 அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அந்தந்த தீயணைப்பு சேவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் பொருத்தமான திருத்தங்கள் செய்வதற்காக "மாநிலங்களுக்கான தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைப் பராமரிப்பு மாதிரி மசோதாவை" வழங்கியது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(रिलीज़ आईडी: 1942561)
आगंतुक पटल : 197