ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 25 JUL 2023 2:29PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005-ன்படி, பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கினராவது பதிவு செய்து வேலை கேட்ட பெண்களாக இருக்க வேண்டும் என்ற வகையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (மகாத்மா காந்தி என்.ஆர்.இ.ஜி.எஸ்) என்பது பாலின-நடுநிலைத் திட்டமாகும், இது ஆண்களுக்கு இணையான ஊதிய சமத்துவம், பெண்களுக்கு ஊதிய விகிதங்களின் தனி அட்டவணையை வழங்குதல், குழந்தைகள் காப்பகத்திற்கான வசதிகள், குழந்தைகளுக்கான வேலை பக்க கொட்டகைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் ஆகியவற்றின் மூலம் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் (என்.ஆர்.எல்.எம்) ஒருங்கிணைந்து, பெண் துணைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது மீண்டும் பெண்களின் பங்கேற்பை எளிதாக்குகிறது. பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அருகிலேயே பணிகளை வழங்கவும் இத்திட்டம் முயல்கிறது.

2018-19 முதல் 2022-23 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு விகிதம் (மொத்த சதவீதத்தில் பெண்கள் மனித நாட்கள் விவரம் 2018-19-ல் 85.40, 2019-20-ல்- 86.30, 2020-21-85.37, 2021-22-85.70,2022-23-ல் 86.41.

 

இத்தகவலை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

ANU/SMB/KPG

 


(रिलीज़ आईडी: 1942476) आगंतुक पटल : 356
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri , Telugu