அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்தியா மற்றும் அர்ஜென்டினா இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் குறிப்பாக உயிரிதொழில்நுட்பம் மற்றும் விவசாயத் துறையில் இருதரப்பு பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன, என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

தொழில்நுட்பம் மற்றும் உயிரிதொழில்நுட்பத் துறையில், கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தகவல் மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளன

அர்ஜென்டினாவின் சாண்டா ஃபே மாகாண ஆளுநர் உமர் ஏஞ்சல் பெரோட்டி, இந்திய அறிவியல் துறை அமைச்சருடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்

Posted On: 24 JUL 2023 6:43PM by PIB Chennai

இந்தியாவும் அர்ஜென்டினாவும் இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் குறிப்பாக பயோடெக்னாலஜி மற்றும் விவசாயத் துறையில் இருதரப்பு பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

இத்தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) இன்று தெரிவித்தார். அர்ஜென்டினாவின் சாண்டா ஃபே மாகாண ஆளுநர் உமர் ஏஞ்சல் பெரோட்டி, உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவரைச் சந்தித்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரிதொழில்நுட்பத் துறையில் கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையை உள்ளடக்கிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்துள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

புதுதில்லியில் பிப்ரவரி 7, 2023 அன்று அர்ஜெண்டினாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் திரு. டேனியல் ஃபிலிமஸை சந்தித்த போது, எரிசக்தி பரிமாற்றம் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி துறைகளில் புதிய இந்தியா-அர்ஜென்டினா கூட்டு திட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இந்த அழைப்பின் கீழ் மொத்தம் 82 கூட்டு திட்டங்கள் பெறப்பட்டன. இவை மதிப்பீட்டு நடவடிக்கையின் கீழ் உள்ளன.

இந்த கூட்டுத் திட்டங்களில் சாண்டா ஃபே மாகாணம் 8 திட்டங்களைக் கொண்டுள்ளது என்று திரு. பெரோட்டி கூறினார். இந்தியாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தில் இந்த மாகாணம் சுமார் 80% பங்களிக்கிறது. குறிப்பாக, சோயாபீன் வேளாண் ஆராய்ச்சி மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் மையமாக சாண்டா ஃபே உள்ளது. இது மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டார். நோய் தடுப்பு உற்பத்திக்கான முதல் முன்னோடி திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்றார்.

இடம்சார்ந்த பகுப்பாய்வு தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் உயிரி ரசாயனங்களில் ஒத்துழைக்கும் ஆர்வத்தை இந்திய பிரதிநிதி குழு வெளிப்படுத்தியது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற பலதரப்பிலான பல்வேறு மட்டங்களில் கூட்டு ஆய்வுகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தியாவும் அர்ஜென்டினாவும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அரசுகளுக்கு இடையே 1985-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த திட்டத்தின் நோக்கம் அறிவியல் சமூகங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும், இந்தியா மற்றும் அர்ஜென்டினா ஆராய்ச்சி குழுக்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களின் கட்டமைப்பில் பரிமாற்றங்களை சாத்தியமாக்குவதும் ஆகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) மற்றும் உயிரிதொழில்நுட்பத் துறையின் (டி.பி.டி) செயலாளர் டாக்டர். ராஜேஷ் எஸ். கோகலே மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் என். கலைச்செல்வி ஆகியோர் இந்திய பிரதிநிதி குழுவில் இடம்பெற்றனர். அர்ஜென்டினா பிரதிநிதி குழுவில் சாண்டா ஃபேவில் உள்ள இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் திரு. ஹ்யூகோ கோபி உள்பட, மாகாணத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் அடங்குவர்.

 

அர்ஜென்டினாவின் 4 வது மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக இந்தியா உள்ளது. இருதரப்பு வர்த்தகம் 2022-ம் ஆண்டில் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இது 2021-ம் ஆண்டை விட 12% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து 1.84 பில்லியன் டாலர் (31% வளர்ச்சி விகிதம்) மதிப்பில் அர்ஜென்டினாவுக்கு ஏற்றுமதியாகி உள்ளது. அர்ஜென்டினாவிலிருந்து இந்தியாவுக்கு 4.55 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதியாகி உள்ளது. வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் கூற்றுப்படி, அர்ஜென்டினாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 961 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் இந்தியாவுக்கான அர்ஜென்டினாவின் ஏற்றுமதி மதிப்பு 3.20 பில்லியன் அமெரிக்க டாலர் உடன், 2022-23 நிதியாண்டில் இந்தியா-அர்ஜென்டினா இருதரப்பு வர்த்தகம் 4.16 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

அர்ஜென்டினாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் பெட்ரோலிய எண்ணெய்கள், வேளாண் ரசாயனங்கள், நூலினால் நெய்யப்பட்ட துணியால் தயாரிக்கப்பட்டவை, கரிம ரசாயனங்கள், மொத்த அளவிலான மருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவை முக்கியமாக அடங்கும். அர்ஜென்டினாவிலிருந்து இந்தியாவுக்கான இறக்குமதியின் முக்கிய பொருட்களில் தாவர எண்ணெய்கள் (சோயா பீன் மற்றும் சூரியகாந்தி), அழகுபடுத்திய தோல், தானியங்கள், ரசாயனக் கழிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும்.

அர்ஜென்டினாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டில் பல இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் அர்ஜென்டினாவின் முதலீடு சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்தியாவில் உள்ள அர்ஜென்டினா நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப சேவைகளில் குளோபண்ட் மற்றும் ஓஎல்எக்ஸ் மற்றும் உற்பத்தித் துறையில் டெக்கின்ட் நிறுவனம் ஆகியவை அடங்கும்.

ராயல் என்ஃபீல்டின் நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைப்பு துறை  9 செப்டம்பர் 2020 அன்று பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள மேசோனிக் அடாக்மாடிக் பவர்ஸ் சர்வதேச செயலக (சிம்பா) குழுமத்தின் உற்பத்தி அலுவலகத்தில் அர்ஜென்டினா அதிபர் திரு. ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம், ராயல் என்ஃபீல்டின் 119 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கு சொந்தமான ஆலைகளுக்கு வெளியே அந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் பிப்ரவரி 2023-ல் ஓ.வி.எல் குழுமம் லிமிடெட் மற்றும் ஒய்.பி.எஃப் (அர்ஜென்டினா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொதுத்துறை நிறுவனம்) இடையே கையெழுத்தானது; ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் மற்றும் இன்ஜின் பராமரிப்புக்கான பாதுகாப்புத் துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் பிப்ரவரி 2023-ல் எச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநட்டிகல் லிமிடெட்) மற்றும் அர்ஜென்டினா விமானப்படை இடையே கையெழுத்தானது. மேலும், ஜூன் 2023-ல் எச்ஏஎல் மற்றும் எஃப்ஏடிஇஏ (ஏரோநாட்டிக்ஸ் துறையில் அர்ஜென்டினா பொதுத்துறை நிறுவனம்) இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா-அர்ஜென்டினா வர்த்தக சபை (ஐஏபிசி) என்ற இருதரப்பு வர்த்தக சபை 14 அக்டோபர் 2020 அன்று முறைப்படி தொடங்கப்பட்டது. அர்ஜென்டினாவில் உள்ள முன்னணி முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை உள்ளடக்கிய லாப நோக்கற்ற அமைப்பாக கருதப்படும் இந்த கவுன்சில் தற்போது 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. ஐ.ஏ.பி.சி, இந்தியாவின் திட்டப் பணிகளுடன் இணைந்து, 25 மார்ச் 2021 அன்று முதல் வர்த்தக அமைப்பை நிறுவியது.

அர்ஜென்டினாவில் சுமார் 2,600 என்ஆர்ஐ.க்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) / பிஐஓக்கள் (இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்) உள்ளனர். பெரும்பாலான என்.ஆர்.ஐ.க்கள் அர்ஜென்டினாவில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் வசிக்கின்றனர். இதில் இந்திய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் அடங்குவர்.

***

AP/AM/RJ


(Release ID: 1942433) Visitor Counter : 137


Read this release in: English , Hindi , Punjabi , Telugu