தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைத் தொழிலாளர் இல்லாத இந்தியாவுக்கான தேசியத் திட்டம்

Posted On: 24 JUL 2023 4:10PM by PIB Chennai

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகளின் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்ட அரசு, 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 இயற்றியது. திருத்தப்பட்ட சட்டம் இப்போது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 என்று அழைக்கப்படுகிறது, இது 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்தவொரு தொழில் மற்றும் செயல்முறையிலும் வேலைக்கு அமர்த்தப்படுவதையும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்கள் மற்றும் செயல்முறைகளில் ஈடுபடுத்துவதையும் முற்றிலுமாக தடைசெய்கிறது.

 

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், வர்த்தகத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், உள்துறை அமைச்சகம்சிறு    மற்றும் நடுத்தர   நிறுவனங்கள் அமைச்சகம்சுரங்க அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்ஆகியவற்றின் பிரதிநிதிகளைக்   கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு) செயலாளர் தலைமையில் அமைத்துள்ளது.   குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கான அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள முயற்சிகளை இக்குழு ஒருங்கிணைக்கிறது.

 

மேலும், புலம் பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்களை பட்டியலிட்டு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மாதிரி மாநில செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

கல்வி அமைச்சகத்தின் சமக்ரா சிக்ஷா திட்டம், அதன் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் செயல்படுத்தப்படுகிறது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  தேவைகள் மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் வருடாந்திர திட்டங்களைத் தயாரிக்கின்றன. அங்கன்வாடி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் மதிப்பீட்டின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளி செல்லா குழந்தைகளை (..எஸ்.சி) அடையாளம் காணும் நோக்கத்திற்காக ஆண்டுதோறும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனஇதில் இடைநிற்றல் மற்றும் ஒருபோதும் சேராத குழந்தைகளும் அடங்குவர்.

இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. மக்களவையில் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

 

 (வெளியீட்டு ஐடி: 1942081)

****
 

ANU/PKV/KRS


(Release ID: 1942278) Visitor Counter : 118


Read this release in: English , Urdu , Punjabi , Telugu