குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தாமதமான நிதியை செலுத்துவதற்கான திட்டங்கள்

Posted On: 24 JUL 2023 4:15PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு  தாமதமாக செலுத்தப்படும்  நிதிப் பிரச்சினையை தீர்க்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:-

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006-ன் விதிகளின்படி, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு  தாமதமாக பணம் செலுத்தும் வழக்குகளைக் கையாள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் வசதிக் குழுக்கள் (எம்.எஸ்.இ.எஃப்.சி) அமைக்கப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 30.10.2017 அன்று பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களிடமிருந்து குறைகளைத் தாக்கல் செய்வதற்கும் நிலுவைத் தொகையைக் கண்காணிப்பதற்கும் சமதான் இணைய தளம் (https://samadhaan.msme.gov.in/MyMsme/MSEFC/MSEFC_Welcome.aspxஎன்ற  இணைய தளத்தை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

தாமதமாக அளிக்கப்படும் நிதி தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க அதிக எண்ணிக்கையிலான எம்.எஸ்.இ.எஃப்.சிகளை அமைக்குமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் கோரியுள்ளது.  டெல்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட எம்எஸ்இஎஃப்சிகளுடன் இதுவரை 152 எம்எஸ்இஎஃப்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்சார்பு இந்தியா  அறிவிப்புகளுக்குப் பிறகு, எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் 14.06.2020 அன்று சமதான் இணையதளத்துக்கு ஒரு சிறப்பு துணை இணையதளத்தை  உருவாக்கியது.

குறு மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறும் நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான பணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி அல்லது பொருட்கள் அல்லது சேவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இருந்தால், செலுத்த வேண்டிய தொகை மற்றும் தாமதத்திற்கான காரணங்களைக் குறிப்பிட்டு அரையாண்டு அறிக்கையை பெரு நிறுவனங்கள் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்ஜெட் 2023 அறிவிப்பு: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 43 பி இன் கீழ்: எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு பணம் செலுத்தும்போது மட்டுமே பணம் செலுத்துவதற்கான செலவினங்களுக்கு விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள்மற்றும் கொள்கை முன்முயற்சிகள் மூலம் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.

இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

 

ANU/IR/KPG


(Release ID: 1942241) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Punjabi , Telugu