தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அவுட்சோர்சிங் முகமைகள் மூலம் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்தல்

Posted On: 24 JUL 2023 4:09PM by PIB Chennai

அரசுப் பணியிடங்கள் ஆட்சேர்ப்பு விதிகளின்படி நிரப்பப்படுகின்றன. இருப்பினும், பணியின் நிர்வாகத் தேவை மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்தம் மூலம் சேவைகளுக்கான அவுட்சோர்சிங் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

"பொது நிதி விதிகள், 2017 (ஜி.எஃப்.ஆர் 2017) மற்றும் "ஆலோசனை மற்றும் பிற சேவைகளை கொள்முதல் செய்வதற்கான கையேடு, 2017" ஆகியவற்றில் மின் கொள்முதல் உட்பட இதுபோன்ற ஆலோசனை அல்லாத அல்லது அவுட்சோர்சிங் சேவைகளை கொள்முதல் செய்வதற்கான விரிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு சேவைகளை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள அவுட்சோர்சிங் பணியாளர்கள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் ஒப்பந்தக் கடமைகள், ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம், 1970, குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948, ஊதியம் வழங்கல் சட்டம், 1936, போனஸ் வழங்கல் சட்டம், 1965, பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972¸ கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்துதல்)  சட்டம், 1996,   சம   ஊதியச்   சட்டம், 1976,   மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள் ஒழுங்குமுறை) சட்டம், 1979, குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (பி & ஆர்) சட்டம், 1986 மற்றும் மகப்பேறு சலுகைச் சட்டம், 1961  போன்ற பொருந்தக்கூடிய தொழிலாளர் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

இச்சட்டங்களின் கீழ் ஒப்பந்ததாரர்களின் பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது, மத்திய மண்டலத்திற்கான தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய) அலுவலகம் (சி.எல்.சி (சி)) மூலம் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. சி.எல்.சி (சி) ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி, குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல், சேவை வழங்குவதற்காக ஒப்பந்ததாரர்களால் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் நலன் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, இந்த நோக்கத்திற்காக ஆய்வுகளை மேற்கொள்கிறது.

இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. மக்களவையில் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.

 

                                                            ****
ANU/PKV/KPG

 


(Release ID: 1942217) Visitor Counter : 155
Read this release in: English , Urdu , Telugu