பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் குறித்த மூன்றாவது பிராந்திய கருத்தரங்கை மும்பையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கருத்தரங்கில் பங்கேற்பு

கிராமப் பாதுகாப்புக் குழுவுக்கு சிறப்பு மரியாதை செலுத்திய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர், நாட்டில் காணாமல் போன 4 லட்சம் குழந்தைகள் எவ்வாறு மீட்கப்பட்டனர் என்பதை விளக்கினார்

Posted On: 23 JUL 2023 8:51AM by PIB Chennai

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த மூன்றாவது ஒரு நாள் மண்டல கருத்தரங்கம் மும்பையில் உள்ள ஸ்ரீ சண்முகானந்தா சந்திரசேகரேந்திர சரஸ்வதி கலையரங்கில் ஜூலை 22 அன்று நடைபெற்றது . இதில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கோவா, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய ஏழு மாநிலங்கள் பங்கேற்றன. கருத்தரங்கில் குழந்தைகள் நலக் குழுக்கள், இளைஞர் நீதி வாரியங்கள், கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடத்தப்படும் தொடர்ச்சியான பிராந்திய கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது.

இக்கருத்தரங்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார் சத்தா சிறப்புரையாற்றினார்.

இளைஞர் நீதிச் சட்டம், விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து இந்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டது. தத்தெடுப்பு செயல்முறைகளில் அதன் தாக்கம் 2022 செப்டம்பரில் திருத்தத்திற்குப் பிறகு விரைவான தீர்வைப் பெற்ற வருங்கால தத்தெடுப்பு பெற்றோர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில் எடுத்துக்காட்டப்பட்டது .

 

குழந்தைகள் நலத் துறையின் இணைச் செயலாளர் திருமதி இந்திரா மல்லோ பேசுகையில், குழந்தைகளுக்கு உரிமைகள், உயிர்வாழும் உரிமை, வளரும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் சமூக இயக்கத்தின் கனவை நிறைவேற்றுவதற்கான கல்வி ஆகியவற்றை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.

மிஷன் வாத்சல்யா போர்ட்டலின்  தொடக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார், அங்கு எம்.ஐ.எஸ் மற்றும் மின்-அலுவலக பயன்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கின்றன.

மிஷன் வாத்சல்யா என்பது எந்தவொரு குழந்தையும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்திட்டமாகும்.  மேலும் அத்தகைய ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சீவ் குமார் சத்தா குறிப்பிட்டார்.

 மிஷன் வாத்சல்யாவை ஏற்றுக் கொண்டதிலிருந்து சிறார் நீதிச் சட்டம், சி.சி.ஐ மற்றும் பிற நிறுவனங்கள் எவ்வளவு மேம்பட்டுள்ளன என்பதையும், அதை செயல்படுத்துவதில் மாவட்ட அதிகாரிகளின் கவனமான மேற்பார்வை பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வாறு பெரிதும் பயனளித்துள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார் .

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி, சி.சி.ஐ.க்கள், சி.டபிள்யூ.சிக்கள், ஜே.ஜே.பிக்கள், ஏ.டபிள்யூ.டபிள்யூக்கள், டி.சி.பி.யுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார், " நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதில் மவுனமாக உங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இந்திய குடிமக்களாகிய நீங்கள், தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்காக உழைப்பவர்கள் அல்லர். உங்களது  பணிவான, மனிதாபிமான உணர்வு மிக்க சேவைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்று கூறினார் .

காணாமல் போன குழந்தைகளைக் கண்டறியும் குழு உதவியுடன், நாட்டில் காணாமல் போன 4 லட்சம் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

 

அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன், ஒரு வருடத்தில் நாடு முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட தத்தெடுப்புகள் நடந்துள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிராமப் பாதுகாப்புக் குழுவுக்கு சிறப்பு மரியாதை செலுத்தினார், மேலும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பட்டியலிடுமாறு வலியுறுத்தினார், இதன் மூலம் ஒருங்கிணைப்புடன், இந்திய அரசு சிறந்த உதவி மற்றும் பாதுகாப்பிற்காக குழந்தைகளைச் சென்றடைய முடியும்.

ஒரு வருடத்திற்கு முன்பு, பள்ளிக்கு வெளியே இருந்த வளர் இளம் பெண்களை மீண்டும் அழைத்து வர அமைச்சகம் எவ்வாறு முடிவு செய்தது என்பதையும், ஒருங்கிணைப்பின் மூலம், 1 லட்சம் சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, கல்வி அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுடன், பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை கல்வி உரிமையை (ஆர்.டி.இ) வழங்குமாறு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் சார்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஒரு சிறப்பு வேண்டுகோளை முன்வைத்தார்.

இந்த நிகழ்வின் மூலம் வெற்றிகரமான மிஷன் வாத்சல்யா முன்முயற்சிகள் பரப்பப்பட்டன .

***

MS/PKV/DL



(Release ID: 1941875) Visitor Counter : 155