அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கோவாவில் நடந்த சிஇஎம் 14 / எம்ஐ 8 கூட்டத்தில் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட பல முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்.

Posted On: 22 JUL 2023 5:22PM by PIB Chennai

கோவாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில், ஜி20 மாற்று எரிசக்தி அமைச்சர்கள் நிலை கூட்டத்திற்கிடையே 8 வது புதிய கண்டுபிடிப்பு இயக்கம்  (எம்ஐ -8) மற்றும் 14 வது தூய்மை எரிசக்தித் துறை அமைச்சரகம்  (சிஇஎம் 14) ஆகியவற்றின் கீழ் 2023, ஜூலை 19-22 தேதிகளில்  நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை  அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார். .

 

கண்காட்சியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

 

இது இந்தியாவின் அதிநவீன முன்னேற்றங்கள், பல்வேறு துறைகளில் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. தூய்மையான எரிசக்தியில் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கியது, மேலும் நாடு முழுவதும் பரவியுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை காட்சிப்படுத்தியது. தூய்மை எரிசக்தித் துறை அமைச்சர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பு இயக்கக் கூட்டங்களில் இந்தக் கண்காட்சி முக்கிய அங்கமாக இருந்தது.

 

தூய்மையான எரிசக்தியை விரைவான வேகத்தில் இயக்க பல நிதி வாய்ப்புகள் மற்றும் மானியங்களையும் அமைச்சர்கள் கூட்டத்தில் டாக்டர் சிங் அறிவித்தார். இது தவிர, தூய்மையான எரிசக்தி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறையின் கீழ் தேசிய சவால் வெற்றியாளர்கள் / மானியம் பெறுபவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்களை வழங்கிகௌரவித்தார். மேலும் பசுமை எரிசக்தி  எதிர்கால இயக்கத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட பி.வி செல்கள் மற்றும் தொகுதிகள் குறித்த நான்கு தேசிய சவால் மானியத் திட்டங்களின் வெற்றியாளர்களை அமைச்சர் கௌரவித்தார்.

 

கூட்டத்தில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றும்போது, இந்தியாவின் முயற்சிகள் குறித்து அவர் விளக்கினார். சிஇஎம் 14/எம்ஐ 8 கூட்டு பற்றி அமைச்சர் டாக்டர் சிங் கூறுகையில், "ஹைட்ரஜனைப் பொறுத்தவரை, சிறிய அளவிலான ஹைட்ரஜன் பள்ளத்தாக்கைத் தொடங்குவதற்கான மேம்பட்ட கட்டத்தில் உள்ளோம், மேலும் நான்கு இந்தோ-டேனிஷ் திட்டங்களையும் தொடங்குகிறோம்.  பசுமையில் இயங்கும் எதிர்கால இயக்கத்தை நோக்கி செயல்திறன் மிக்க சூரிய மின்கலங்களை தயாரிப்பதற்கான நான்கு திட்டங்களையும் நாம்  தொடங்குகிறோம்.  புதிய குறைந்த கார்பன் ஜெட் எரிபொருளை உருவாக்குவதற்கான ஏழு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார்.

***

AD/SMB/DL



(Release ID: 1941759) Visitor Counter : 130