மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் தலைமையிலான நிலையான வளர்ச்சி - டபிள்யூ 20 மக்கள் பங்கேற்பு நிகழ்வு

Posted On: 22 JUL 2023 2:19PM by PIB Chennai

விடுதலையின் அமிர்தப் பெருவிழா மற்றும்  டபிள்யூ 20 மக்கள் பங்கேற்பு  நிகழ்வின் கீழ், "பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் தலைமையிலான நிலையான வளர்ச்சி" என்ற கருப்பொருள் கொண்ட நிகழ்வு, குஜராத் மாநிலம் ஆனந்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பால்பண்ணை துறையைச் சேர்ந்த பிரமுகர்கள்,  வல்லுநர்கள் மற்றும் பெண் தலைவர்கள் தீவிரமாக பங்கேற்றனர்.

மெய்நிகர் முறையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, பால்பண்ணை துறையில் பெண்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டார், மேலும் 18 பால் கூட்டுறவு சங்கங்கள் தற்போது பெண்களால் இயக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, வெண்மைப் புரட்சியில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வலியுறுத்தினார், பால்வளத் துறையில் 70 சதவீத தொழிலாளர்கள் பெண்கள். புதிய ஏ-ஹெல்ப் (சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தி விரிவாக்கத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்) முன்முயற்சி, முதன்மை சேவைகளை வழங்கும் போது உள்ளூர் கால்நடை சேவைகளுக்கும் கால்நடை உரிமையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் சமூக அடிப்படையிலான பெண் ஆர்வலர்களை உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே சுகாதாரம் என்ற கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும், நோய்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

குஜராத் அரசின் கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு. ஜெகதீஷ் விஸ்வகர்மா குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். டபிள்யூ 20 இன் தலைவர் டாக்டர் சந்தியா ப்ரேச்சா, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு ஜெயன் மேத்தா, ஐ.டி.எஃப் இயக்குநர் ஜெனரல் திருமதி கரோலின் எமண்ட், என்.டி.டி.பியின் தலைவர் டாக்டர் மீனேஷ் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

AD/PKV/DL


(Release ID: 1941736) Visitor Counter : 151