குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் இலங்கை அதிபர்

प्रविष्टि तिथि: 21 JUL 2023 6:55PM by PIB Chennai

 

இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்கே, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (21.07.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

 

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவை வரவேற்ற குடியரசுத் தலைவர், "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற இந்தியாவின் கொள்கை மற்றும் இந்த பிராந்தியத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் இலங்கை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார். 

 

கடந்த ஓராண்டில் இலங்கையின் பொருளாதார சவால்களைச் சமாளிக்க இந்தியா வழங்கிய பன்முக ஆதரவு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என குடியரசுத் தலைவர் கூறினார். தேவையான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு எப்போதும் துணை நிற்கும் என்றும், எதிர்காலத்திலும் இது தொடரும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

இரு நாடுகளின் கூட்டுச் செயல்பாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

இந்தியாவும் இலங்கையும் பல முக்கிய திட்டங்களில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

 

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவின் தலைமையின் கீழ் இலங்கையுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பலப்படுத்த இந்தியா ஆவலுடன் உள்ளதாக குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.

*******

 

ANU/ PLM / KRS


(रिलीज़ आईडी: 1941608) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी