நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நாடு முழுவதும் உள்ள 5.45 லட்சம் நியாயவிலைக் கடைகள் மூலம் 80.10 கோடி பயனாளிகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்
प्रविष्टि तिथि:
21 JUL 2023 3:33PM by PIB Chennai
ஜூன்30, 2023 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 5.45 லட்சம் நியாயவிலைக் கடைகள் (எஃப்.பி.எஸ்) மூலம் சுமார் 80.10 கோடி பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின்படி, ரேஷன் அட்டைகள் மற்றும் பயனாளிகள் பட்டியலை மறுஆய்வு செய்தல், தகுதியற்ற ரேஷன் அட்டைகளை அடையாளம் காணுதல், தகுதியான குடும்பங்களைச் சேர்ப்பது போன்றவை சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பொது விநியோகத் திட்டத்தில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டம் இப்போதைக்கு மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
இத்தகவலை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
ANU/PLM/KRS
(रिलीज़ आईडी: 1941596)
आगंतुक पटल : 201