விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை விவசாயத்திற்காக பசு காப்பகங்களை மேம்படுத்தும் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2023 4:07PM by PIB Chennai

பிரம்பர்கத் கிரிஷி விகாஸ் யோஜனா (பி.கே.வி.ஒய்) என்ற திட்டத்தின் துணை திட்டமான பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்தி (பி.பி.கே.பி) திட்டத்தின் கீழ் மத்திய அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. இயற்கை வேளாண்மை என்பது கால்நடைகள் மற்றும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட ரசாயனமற்ற விவசாயமாகும். இது பெரும்பாலும் பண்ணை உயிரி மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்டது.

ஆந்திரா, சத்தீஸ்கர், கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களில் சுமார் 4.09 லட்சம் ஹெக்டேர் நிலப் பகுதிகள் பிபிகேபி திட்டத்தின் கீழ் வருகின்றன. கால்நடை சார்ந்த இயற்கை விவசாய இடுபொருட்களின் பண்ணை உற்பத்தியில் கவனம் செலுத்தி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு உத்தேசித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், "அடுத்த 3 ஆண்டுகளில், 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வசதி செய்யப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 10,000 உயிர் உள்ளீட்டு வள மையங்கள் (பி.ஆர்.சி) அமைக்கப்படும். உள்ளூர் கால்நடைகள் அடிப்படையிலான இயற்கை விவசாய இடுபொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக இந்த பி.ஆர்.சி.க்கள் அமைக்கப்படும்.

இத்தகவலை மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

****

(RELEASE ID: 1941398)

ANU/PLM/KRS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1941555) வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu