விவசாயத்துறை அமைச்சகம்
செயற்கைக்கோள் மூலம் பயிர் ஆய்வு வரைபட உருவாக்கம்
प्रविष्टि तिथि:
21 JUL 2023 4:08PM by PIB Chennai
பயிர் உற்பத்தி முன்னறிவிப்பு மற்றும் வறட்சி மதிப்பீடு தொடர்பான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பயிர் உற்பத்திக்கான விண்வெளி, வேளாண் வானிலையியல் மற்றும் நிலம் சார்ந்த கணிப்புகள் (ஃபாசல்) திட்டத்தைப் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை மதிப்பிட்டு முன் திட்டமிடல், வறட்சி மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு செயல்முறை (நாடாம்ஸ்) போன்றவற்றுக்கு செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்படுகிறது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையுடன் இணைக்கப்பட்ட அலுவலகமான மகாலனோபிஸ் தேசிய பயிர் முன்னறிவிப்பு மையத்தால் (எம்.என்.சி.எஃப்.சி) ஃபாசல் மற்றும் நாடாம்ஸ் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, அரிசி, கோதுமை, ராபி பயறு வகைகள், கடுகு, ராபி, சோளம், பருத்தி, சணல், துவரை மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் ஃபசால் திட்டத்தின் கீழ் வருகின்றன.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு செயல்பாட்டு பயன்பாடுகளுக்கும் செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இஸ்ரோ மற்றும் தொழில்துறையினருடன் இணைந்து பல்வேறு புவிசார்ந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் எம்.என்.சி.எஃப்.சி பணியாற்றி வருகிறது. சமீபத்தில், எம்.என்.சி.எஃப்.சி மற்றும் பிக்ஸெல் ஸ்பேஸ் இந்தியா இடையே பிக்ஸெல் நிறுவனத்தின் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோள்களின் படங்களைப் பயன்படுத்தி விவசாய பகுப்பாய்வு மாதிரிகளை உருவாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மண் கரிம கார்பன் மதிப்பீடு ஆகியவற்றை சோதனை அடிப்படையில் உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பயிர் மதிப்பீட்டு கணக்கெடுப்புகள், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் பண்ணை அளவிலான ஆலோசனைகளில் துல்லியத்தை மேம்படுத்தும்.
இத்தகவலை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
(RELEASE ID: 1941400)
ANU/PLM/KRS
(रिलीज़ आईडी: 1941541)
आगंतुक पटल : 236