கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பலவகையான சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள்
Posted On:
21 JUL 2023 3:27PM by PIB Chennai
சாகர்மாலா திட்டத்தில் சரக்குப்போக்குவரத்துப் பூங்காக்களின் 13 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 13 திட்டங்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், பெரிய துறைமுகங்கள் மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், பாரத்மாலா கட்டம் 1 இன் கீழ் 35 பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை (எம்.எம்.எல்.பி) சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இவற்றில் கொச்சி (கேரளா), சென்னை (தமிழ்நாடு), விசாகப்பட்டினம் (ஆந்திரா), மும்பை (மகாராஷ்டிரா), கொல்கத்தா (மேற்கு வங்கம்), கண்ட்லா (குஜராத்) ஆகிய துறைமுக நகரங்களில் 6 எம்.எம்.எல்.பி.க்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைக்கிறது.
பொருளாதார மேம்பாடு, சமூகங்களை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சாகர்மாலா திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்துடன் இணைந்து ரூ.3,700 கோடி மதிப்பிலான 26 மீன்பிடித் துறைமுகத் திட்டங்களுக்கு பகுதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், மல்லேட் பந்தர் ஆகிய முக்கிய துறைமுகங்களை ஒட்டியுள்ள ஐந்து மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நிலையான படகுத்துறைகளுக்கு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுத் தீர்வாக மிதக்கும் படகுத்துறைகளை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் 50 இடங்களை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
மேலும், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டு, 5000-க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடல்சார் மற்றும் கப்பல் கட்டுமானத்தில் சிறப்பு மையத்தை அமைச்சகம் அமைத்துள்ளது, இது 6000-க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
இணைப்பு: சாகர்மாலாவில் சேர்க்கப்பட்ட சரக்குப்போக்குவரத்துப் பூங்காக்கள் திட்டங்களின் பட்டியல்
வ.எண்
|
திட்டத்தின் பெயர்
|
நிலை
|
1
|
தெற்கு உத்தராகண்டில் புதிய ஐ.சி.டி மேம்பாடு-எம்.எம்.எல்.பி பந்த்நகர்
|
உத்தராகண்ட்
|
2
|
ராய்ப்பூரில் புதிய ஐ.சி.டி மேம்பாடு -எம்.எம்.எல்.பி நயா ராய்ப்பூர்
|
சத்தீஸ்கர்
|
3
|
ஜார்ஜூகுடாவில் புதிய ஐ.சி.டி மேம்பாடு
|
ஒடிசா
|
4
|
பலவகையான சரக்குப்போக்குவரத்து மையத்தின் இரண்டாம் கட்டம் - விசாகப்பட்டினம் துறைமுகம்
|
ஆந்திரப் பிரதேசம்
|
5
|
ஹைதராபாதில் புதிய ஐ.சி.டி மேம்பாடு -எம்.எம்.எல்.பி நகுலபள்ளி
|
தெலங்கானா
|
6
|
நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் என்ற இடத்தில் உலர் துறைமுகம்
|
மகாராஷ்டிரா
|
8
|
சாங்லி மாவட்டத்தில் உள்ள ரஞ்சனி கிராமத்தில் உலர் துறைமுகம்
|
மகாராஷ்டிரா
|
9
|
ராஜஸ்தானில் புதிய ஐ.சி.டி மேம்பாடு -எம்.எம்.எல்.பி ஸ்வரூப்கஞ்ச்
|
ராஜஸ்தான்
|
10
|
பாரதீப் துறைமுகத்தில் பலவகையான சரக்குப்போக்குவரத்துப் பூங்கா
|
ஒடிசா
|
11
|
வடக்கு வங்காளத்தில் புதிய ஐ.சி.டி வளர்ச்சி -டார்ஜிலிங்
|
மேற்கு வங்கம்
|
12
|
வார்தாவில் உள்ள உலர் துறைமுகம்
|
மகாராஷ்டிரா
|
13
|
ஜல்னாவில் உள்ள உலர் துறைமுகம்
|
மகாராஷ்டிரா
|
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1941381
ANU/SMB/KRS
(Release ID: 1941524)