புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது என்று திரு கிரண் ரிஜிஜு கூறுகிறார்

Posted On: 20 JUL 2023 4:10PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வு மையம்  சமீபத்தில் சோதனை அடிப்படையில் வெப்ப குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக  மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.  வெளிப்படையான வெப்பநிலை / உணரும் வெப்பநிலை (வெப்பநிலையுடன் ஈரப்பதத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு) மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும் பிராந்தியங்களுக்கு பொதுவான வழிகாட்டலை வழங்குவதற்காக சோதனை வெப்ப குறியீட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது, அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் பயன்படுத்துவதைப் போன்ற வெப்ப குறியீட்டு சமன்பாட்டைப் பயன்படுத்தி வெப்பக் குறியீட்டெண் பெறப்படுகிறது.

 

சோதனை வெப்பக் குறியீட்டிற்குப் பயன்படுத்தப்படும் வண்ணக் குறியீடுகள் பின்வருமாறு:

 

பச்சை:- சோதனை வெப்ப குறியீட்டெண் 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது

 

மஞ்சள்:- சோதனை வெப்பக் குறியீடு 36-45 டிகிரி செல்சியஸ் வரம்பில்

ஆரஞ்சு:- சோதனை வெப்ப குறியீட்டெண் 46-55 டிகிரி செல்சியஸ் வரம்பில்

 

சிவப்பு:- சோதனை வெப்ப குறியீட்டெண் 55 டிகிரி செல்சியஸை விட அதிகமாக உள்ளது

 

ஆந்திர மாநிலம் உட்பட நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் மட்டுமே வெப்பக் குறியீடு செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். இருப்பினும், வெப்ப செயல் திட்டத்தின் கீழ் புவனேஸ்வர் மற்றும் அகமதாபாத்திற்கான வெப்பக் குறியீடு இந்திய பொது சுகாதார நிறுவனம்  போன்ற உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால்  திட்ட முறையின் கீழ் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

****



(Release ID: 1941012)

IR/KPG/KRS

 


(Release ID: 1941207) Visitor Counter : 161


Read this release in: English , Urdu , Marathi , Malayalam