பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடலோர காவல்படையின் 25-வது தலைமை இயக்குநராக திரு ராகேஷ் பால் நியமனம்
Posted On:
19 JUL 2023 7:55PM by PIB Chennai
இந்திய கடலோர காவல்படையின் (ஐ.சி.ஜி) 25 வது தலைமை இயக்குநராக திரு ராகேஷ் பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், ஜனவரி 1989-ல் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் கன்னேரி & ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவத்தையும், இங்கிலாந்தில் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கன்ட்ரோல் சொல்யூஷன் படிப்பையும் பெற்றுள்ளார்.
34 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள அவர், காந்திநகரின் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை தலைமை இயக்குநர் (கொள்கை மற்றும் திட்டங்கள்) மற்றும் புது தில்லி கடலோர காவல்படை தலைமையகத்தில் கடலோர காவல்படை கூடுதல் தலைமை இயக்குநர். இது தவிர, புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் இயக்குநர் (உள்கட்டமைப்பு மற்றும் பணிகள்) மற்றும் முதன்மை இயக்குநர் (நிர்வாகம்) போன்ற பல்வேறு மதிப்புமிக்க பணியாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். ஐ.சி.ஜி.எஸ் சமர்த், ஐ.சி.ஜி.எஸ் விஜித், ஐ.சி.ஜி.எஸ் சுசேதா கிருபளானி, ஐ.சி.ஜி.எஸ் அகல்யாபாய் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் சி -03 ஆகிய கப்பல்களில் தலைமை பொறுப்பு வகித்துள்ளார்.
அவரது சிறப்பான சேவைக்காக 2013-ம் ஆண்டு கடலோர காவல்படை பதக்கமும் 2018-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் கடலோர காவல்படை பதக்கமும் வழங்கப்பட்டது.
------
SM/KRS
(Release ID: 1940845)
Visitor Counter : 292